Saturday, May 1, 2010

டெல்லியில் கருணாநிதி சோனியா சந்திப்பு. நடந்தது என்ன ?
(கருணாநிதி இன்று டெல்லி சென்று, சோனியா, மற்றும் மன்மோகன் சிங்குடன், சிறப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பேச்சு வார்த்தையில் நடந்தது என்ன என்று சவுக்கு புலனாய்வு செய்ததில், கிடைத்த தகவல்கள், சவுக்கு வாசகர்களுக்கு)

கருணாநிதி வணக்கம். தியாகத் திருவிளக்கே. இந்திரா குடும்பத்தின் குலவிளக்கே. ராஜீவின் குத்து விளக்கே. இந்தியாவின் கலங்கரை விளக்கே. கார்த்திகை மாதத்து அகல் விளக்கே. சரவண பவன் கை முறுக்கே…

சோனியா. போதும் கருணாநிதிஜி. போதும். பிரயாணம் எல்லாம் நல்லா இருந்துச்சா ?

கருணாநிதி எனக்கு என்னங்க பிரயாணம். தள்ளு வண்டில ஏறி உக்காந்தா தள்ளிட்டுப் போகப் போறாங்க. நிறுத்துன்னா நிறுத்துவாங்க. ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும், தமிழுக்கும், தமிழ் கூறும் நல்லுலகுக்கும் சேவை செய்யத் தானே நான் இருக்கேன்.

சோனியா. சொல்லுங்க கருணாநிதிஜி. என்ன விஷயம்.

கருணாநிதி வேற என்னங்க கேக்கப் போறேன். எனக்குன்னு பெரிய ஆசைல்லாம் ஒன்னும் இல்லங்க. சின்ன வயசுலேர்ந்து செல்லமா வளர்ந்த புள்ள. அவன் ஆசைய நெறவேத்தி வைக்கணும் இல்லயா ? இல்லன்னா நாளைக்கு வரலாறு குத்தம் சொல்லும் பாருங்க…சோனியா. கருணாநிதிஜி. நீங்க கேட்டத எல்லாம்தான் கொடுத்துட்டோமே. ஏதும் பாக்கி வைக்கலயே.. உங்க பையனைத்தான், கெமிக்கல் மினிஸ்டர் ஆக்கிட்டோமே.. ஆனா, உங்க பையன்தான் வேலைக்கே வரமாட்றாரு. பாருங்க. பார்லிமென்ட்டுக்கு வராததால, எதிர்க்கட்சியெல்லாம் கேள்வி கேக்கறாங்க.

கருணாநிதி எனக்கும் என் பையனுக்கும் ஒரு பழக்கங்க. என் அன்புத் தம்பி ரஜினிகாந்த் நடிச்ச படத்தில, இப்போ மந்திரியா இருக்கற அன்பு இளவல் நெப்போலியன் ஒரு வசனம் பேசிருப்பாரு. “சாவு வீட்டுக்கு போனா… …. நான்தான் பொணமா இருக்கணும். கல்யாண வீடுன்னா… நான்தான் மாப்ளையா இருக்கணும் னு ஒரு வசனம் பேசுவாரு. “ நானும் என் பையனும் அப்படித்தாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க.. ஒரு நாள் பாராட்டு விழா நடத்துலன்னாலும், எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது தெரியுமா ? நேத்து பெண் சிங்கம் ஒலி நாடா வெளியீட்டு விழா இருந்துச்சு… அதனால சமாளிச்சுட்டேன். முந்தா நாள் எந்த விழாவும் இல்லையா… வேற வழியில்லாம, என் வீட்டுக்கு பக்கத்துல இருந்த இளநி விக்கறவன், செருப்பு தைக்கிறவன், பக்கத்துல இருந்த பெட்ரோல் பங்குல பெட்ரோல் போடற தம்பி, எல்லாரையும், வீட்டுக்கு கூப்புட்டு, 2 மணி நேரம் என்னை பாராட்டிப் பேச சொன்னதும் தான் எனக்கு தூக்கம் வந்துச்சு.

சோனியா. சரி. விஷயத்துக்கு வாங்க…..

கருணாநிதி மத்திய அமைச்சரா இருந்து, கூட்டத்தோட கூட்டமா ஒக்கார்ரது நம்ம அழகிரிக்கு பிடிக்கலங்க. பேசாம அவன பிரதமர் ஆக்கிடுங்க. அதச் சொல்றதுக்குத் தான் டெல்லி வந்தேன். பிரதமர் ஆக்கிட்டீங்கன்னா, ரெகுலரா பார்லிமென்டுக்கு வரச் சொல்றேன்.


சோனியா. அவ்ளோதானா.. வேற ஏதாவது இருக்கா.
கருணாநிதி வேற என்னங்க கேக்கப் போறேன். கனி மொழிய துணைப் பிரதமர் ஆக்கிட்டீங்கன்னா சிஐடி காலனி போய் நைட் தூங்கறது பிரச்சினை இருக்காது. எனக்கு வேற என்னங்க ஆசை.


சோனியா. அப்போ மன்மோகன் சிங்க என்னங்க பண்றது ?


கருணாநிதி அவர மன்மோகன் சிங்குனு சொல்றத விட மங்குணி சிங்குன்னு சொல்லுங்க. என்னா அரசியல் பண்றாரு அந்த ஆளு. பார்லிமெண்டுல கண்ட பயல்லாம் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கான். இந்த ஆளும் பொறுப்பில்லாம பதில் சொல்லிக்கிட்டு இருக்காரு ? நம்ப தம்பி அழகிரிய பிரதமர் ஆக்குங்க. கூடவே அட்டாக் பாண்டிய வச்சுகிட்டு இருப்பான். அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் இருக்கும் போது, ஒரு பய கேள்வி கேப்பானா ? அவன் பேரே அஞ்ச நெஞ்சன்ங்க. அதுனாலத்தான் சொல்றேன். பேசாம நம்ப அழகிரிய பிரதமர் ஆக்கிடுங்க.


சோனியா. அப்போ என் பையன என்ன பண்றது ?கருணாநிதி என்னங்க. கொஞ்ச நாள்… ஒரு 20 வருஷத்துக்கு என் பையன் பிரதமரா இருக்கட்டும். அப்புறம், நம்ப ராகுல் தம்பிய துணைப் பிரதமரா ஆக்கிடுறேன்.

சோனியா.அப்புறம் இந்த ராசா விவகாரம்….

கருணாநிதி சமுதாயத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பிலே பிறந்து, தன்னை முன்னேற்றிக் கொண்ட ஒரு ஏழை அமைச்சரை அவதூறாகப் பேசுவதென்பது, அறிஞர் அண்ணா…

சோனியா. மிஸ்டர் கருணாநிதி. லிசென் டு மி. ராசா ஒரு லட்சம் கோடி ஆட்டயப் போட்ருக்காரு. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல…. ஒரு லட்சம் கோடி… சட்டம் தன் கடமையை செய்யும்.


கருணாநிதி என்னங்க. வர்ற அசெம்பிளி எலெக்ஷன்ல, காங்கிரசுக்கு 100 சீட் கொடுத்துட்டு, நீங்க சொல்ற ஆளுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம்னு இருந்தேன். நீங்க இப்படி பேசுறீங்க…


சோனியா. சட்டம் தன் கடமையை செய்யும்னா என்ன ? வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால, வழக்கு வைவிடப்படுகிறதுன்னு, உச்ச நீதிமன்றத்துல, சிபிஐ இயக்குநர மனு தாக்கல் பண்ணச் சொல்றேன். இதே சிபிஐ, கொட்ரோக்கியை காப்பாத்தி, அவர் அக்கவுண்ட்ல இருந்த பணத்த ரிலீஸ் பண்ணல ?


கருணாநிதி இதனால்தான் நான் உங்களை தியாகத் திருவிளக்கு என்று கூறுகிறேன். அன்றே கூறினார் அண்ணா…


சோனியா. போதும் மிஸ்டர் கருணாநிதி. இது தமிழ்நாடு சட்டசபை இல்ல.


கருணாநிதி இன்னொரு விஷயம்.


சோனியா. என்ன, அழகிரி பையன உள்துறை மந்திரி ஆக்கணுமா ?


கருணாநிதிஅய்யய்யோ… நான் அப்படியெல்லாம் ஆசைப் பட மாட்டேங்க… இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் மாதிரியே… 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தையும், நம்ப தம்பி ராசாவையே நடத்த சொன்னீங்கன்னா, இந்திய தொலைத் தொடர்புத் துறை வரலாற்றுலயே, அது ஒரு மைல் கல்லா இருக்கும்.


சோனியா. நோ. நாட் பாசிபிள். ரொம்ப ஆசைப்படாதீங்க. அப்புறம், உங்கள மாதிரியே நான் “தெற்கு வாழ்கிறது. வடக்கு வழுக்குகிறது“ ன்னு பேச வேண்டியிருக்கும்.


கருணாநிதி இன்னும் ஒரே ஒரு விஷயம்.


சோனியா. சொல்லுங்க.


கருணாநிதி மெட்ராஸ் ஹைகோர்ட்டுல, சில நீதிபதிகள், நீதிபதிகள் மாதிரி நடந்துக்கறாங்க. நியாயமான தீர்ப்புகளை வழங்கும், கழக உடன் பிறப்புகளைப் பார்த்தும், சரியான முறையில் அவர்கள் கற்றுக் கொண்டதாய் தெரியவில்லை. இந்த மாதிரி அவங்க நீதிபதிகள் மாதிரி நடந்துகிட்டா, நான் எப்படி ஆட்சி நடத்துறது ? நீங்கதான் மனசு வச்சு, கழக உடன்பிறப்புகளாய்ப் பார்த்து, மெட்ராசுல நீதிபதிகளாய் நியமிக்கனும்.


சோனியா. ஓகே. வி வில் சீ.

சந்திப்பு முடிந்தது.

(பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவை இந்தியாவிற்குள் அனுமதித்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு, சோனியாவைப் பார்த்து மன்றாடி கேட்டுக் கொண்டதாகவும், சோனியா அந்த கோரிக்கையை கருணையோடு பரிசீலிப்பதாக தெரிவித்ததாகவும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் கோரிக்கையையும், சோனியாவிடம் தெரிவித்ததாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போதும், நிலைநாட்டுவதே, திமுகவின் வேலை என்றும், அந்த வரலாற்றுக் கடமையிலிருந்து திமுக என்றுமே வழுவாது என்றும் கூறினார்.)சவுக்கு

2 comments:

  1. below the belt... hahahaha...hahahaha...hahahhahahah....hahahhahahaah....superp

    ReplyDelete
  2. kantibpa antha naye pulla ketuirukum

    ReplyDelete