Friday, October 17, 2014

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.

1991-1996 ஜெயலலிதா ஆட்சி குறித்து, சென்று வா மகளே சென்று வா என்ற கட்டுரையில் விரிவாக அலசினோம். அதில் விடுபட்ட சில பகுதிகளை பார்த்து விட்டு 2001 ஜெயலலிதா ஆட்சியை அலசுவோம்.


சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறதுசாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும், மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும், இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள்..... பிறகு ஏன் மோதல் ?

இதற்கு ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 195 சீட்டுகளை வெல்கிறதுஆனால், வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள் கூட்டடணி, வெறும் 140 சீட்டுகள் மட்டுமே பெற்றதுஆனால், ராஜீவ் ஏனோ, ஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார். இடது சாரிகள் மற்றும் பிஜேபியின் 52 எம்.பிக்களின் ஆதரவோடு, விபி சிங் பிரதமரானார். ரதயாத்திரையை தடுத்த காரணத்தால், பிஜேபி ஆதரவை வாபஸ் பெறவும், விபி.சிங் அரசு கவிழ்ந்தது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

வெறும் 55 எம்.பிக்களை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் 195 எம்.பிக்கள் ஆதரவோடு ஆட்சியமைத்தார் சந்திரசேகர்அந்த சந்திரசேகர் அரசில் வர்த்தகம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன் சுவாமி. அப்போது, ஜெயலலிதாவின் ஒரே குறிக்கோள், தமிழகத்தில் நடக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது. இதுபற்றி சுப்ரமணிய சுவாமியிடம் பேசுகிறார் ஜெயலலிதா. சுவாமியும் அதற்கு சம்மதிக்கிறார்கருணாநிதி அரசை நான் டிஸ்மிஸ் செய்ய வைக்கிறேன், பதிலுக்கு எனக்கு ஒரு எம்.பி பதவி வேண்டும் என்று கேட்கிறார்.   அதற்கு சம்மதித்த ஜெயலலிதா, எனக்கு தேர்தல் செலவுக்கு பணம் இல்லைஅதனால் செலவுக்கு பணம் வாங்கித் தர வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையையும் ஜெயலலிதா வைக்கிறார். வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த சுவாமிக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைஅஷோக் லெய்லேன்ட் மற்றும் இன்னும் சில நிறுவனங்களிடமிருந்து ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக்காக 10 கோடி பெற்றுத் தருகிறார்.


ஜனவரி மூன்றாம் வாரத்தில் சென்னையில் நடந்த ஒரு உலகத் திரைப்பட விழாவை துவக்கி வைக்க வந்த அப்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சர் சுபோத் காந்த் சஹாயிடம், பத்திரிக்கையாளர்கள் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படுமா? என்று கேட்டதற்கு, அப்படி ஒரு எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டு அதற்கு அடுத்த வாரத்திலேயே, அதாவது 1991, ஜனவரி 31-ம் தேதி, திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதுவும் அன்றைய தமிழக ஆளுனர் பர்னாலாவிடம் அறிக்கை பெறாமலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பிறகு ஜூன் 15-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடையில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி. .தி.மு..வும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன. ஆனால், தேர்தலுக்கு முன்னதாக, மே 21 அன்று ராஜீவ் இறந்து போகிறார்சுவாமி, தான் அளித்த வாக்கை காப்பாற்றினார். ஆனால், ஜெயலலிதா சுவாமிக்கு வாக்களித்தபடி, எம்.பி சீட் தரவில்லைதேர்தல் முடிந்து, ஜெயலலிதாவை சந்தித்த சுவாமி, எம்.பி சீட்தான் தரவில்லை. தான் அளித்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்கிறார்எனக்கு பணம் கொடுத்தது அஷோக் லெய்லேன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், அவர்கள் கேட்டால் நான் தருகிறேன்உங்களிடம் தர முடியாது என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்பணத்தையும் பறிகொடுத்து, எம்.பி சீட்டும் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த சுவாமி, ஓடு மீன் ஓட உறுமீனுக்காக காத்திருக்கிறார் 1992,மே 19 அன்று சந்திரலேகாவின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது.


சந்திரலேகாவோடு சுவாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்சந்திரலேகாவை இஸ்ரேல் அழைத்துச்சென்று, நவீன ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம், அவரின் ஆசிட் காயங்களை சரி செய்ய சுவாமி உதவுகிறார்.

9 நவம்பர் 1992-ம் ஆண்டு, தற்போது அப்போல்லோ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள சிந்தூரி ஹோட்டலில் சந்திரலேகாவை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி, இந்த தாக்குதலுக்கு முழுக் காரணமும் ஜெயலலிதாதான் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.   அதிர்ந்து போகிறது தமிழகம். அது வரை, அதிகாரிகள் மட்டத்தில் இந்த விபரங்கள் அரசல் புரசலாக பேசப்பட்டுக் கொண்டிருந்தாலும், வெளிப்படையாக சுவாமி இப்படி அறிவித்தபோது, ஊடகங்களில் அது பெரிய செய்தியாக வெளியிடப்பட்டது.

அடுத்ததாக, 1993-ம் ஆண்டு, ஜெயலலிதா மீது புதிய ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார் சுவாமிஜெயலலிதாவும் சசிகலாவும், ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள்.   அப்படி இருக்கையில் அரசு நிறுவனமான, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் எப்படி பாடநூல் அச்சிட்டுத் தர முடியும், இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் என்று புகாரை தெரிவிக்கிறார்

ஜெயலலிதாவை இது மேலும் மேலும் எரிச்சலாக்குகிறதுஅப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அலெக்சாண்டரிடம் ஆலோசனை கேட்கிறார். அலெக்சாண்டர், இந்த ஆள் உயிரோடு இருக்கும் வரை பிரச்சினைதான்இந்த ஆள் கதையை முடித்து விடுவோம். என்று ஆலோசனை கூறுகிறார்அதற்கான திட்டத்தையும் கூறுகிறார்சுப்ரமணிய சுவாமியை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து, சென்னை சென்ட்ரல் சிறையில் அடைத்து விடுவோம். அதன்பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, அவரை அப்படியே எதிரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றி விடலாம். அங்கே டாக்டர்கள் இவர் கதையை முடித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறுகிறார்

சமீபத்தில் அதிமுக அடிமைகள் சங்கத்தில் சேர்ந்த
முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர்
இந்த ஆலோசனையின் பின்னணியில்தான், சுவாமி மீது "இன்டர்நேஷனல் பறைய்யா" என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கூட்டத்தில் பேசியதற்காக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் சுவாமியை கைது செய்ய பகீரதப் பிரயத்தனம் எடுக்கப்பட்டது குறித்து விரிவாக பழைய கட்டுரையில் பார்த்தீர்கள்இறுதியாக விமான நிலையத்தில் நுழைந்து சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று முயற்சி நடந்தபோது, அதைத் தடுத்தது அன்றைய டிஜிபி ஸ்ரீபால்தான். நான் சொன்னேன் என்று முதல்வரிடம் சொல்லுங்கள்.   சுவாமி கைது செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடுகிறார்இறுதியாக சுவாமி தப்பிச் சென்றதும், ஸ்ரீபால் மாற்றப்பட்டு, அவர் இடத்துக்கு வைகுந்த் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்.

முன்னாள் டிஜிபி வைகுந்த்
வைகுந்தை அழைத்த ஜெயலலிதா, அலெக்சாண்டரின் திட்டத்தைச் சொல்லி, சுவாமியை எப்படியாவது கைதுசெய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்டு வெலவெலத்துப் போய், ஜெயலலிதாவை தலைக்கு மேலே கையெடுத்து கும்பிட்ட வைகுந்த், ஏற்கனவே தமிழகத்தில் நடந்த சந்திரலோகா ஆசிட் வீச்சு, வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீதான தாக்குதல், விஜயன் மீதான தாக்குதல் ஆகியவற்றில் உங்கள் பெயர்தான் அடிபடுகிறது. மூன்று வழக்குகளுமே சி.பி. விசாரணையில் உள்ளது.   அந்த விசாரணை எந்த திசைக்கு செல்லும் என்பது தெரியாது.   இந்த மூவரும் சாதாரண நபர்கள். ஆனால் சுப்ரமணியன் சுவாமி இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க தொடர்புகள் உள்ள பிரபலமான நபர்அவருக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால், நான் மட்டுமல்ல, நீங்களும் சிறை செல்ல நேரிடும். என்னால் இந்த காரியத்தை செய்ய முடியாது. எனக்கு இந்த டிஜிபி பதவியே வேண்டாம் என்று கூறுகிறார்.

அதற்குப் பிறகுதான் ஜெயலலிதாவுக்கு அலெக்சாண்டர் மீது லேசாக சந்தேகம் ஏற்படுகிறது.   இதையடுத்து உளவுத்துறை தலைவராக இருந்த அலெக்சாண்டரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க உத்தரவிடுகிறார்.

அந்த உரையாடல்கள் ஜெயலலிதாவிடம் போட்டுக் காண்பிக்கப்பட்டபோது அதிர்ந்து போகிறார் ஜெயலலிதாஅந்த அத்தனை உரையாடல்களும், சரச சல்லாபம் தொடர்பான உரையாடல்கள்.   நம்மை வகையாக மாட்டிவிட திட்டம் போட்டு விட்டு, இந்த நபர் தொலைபேசியில் சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறாரே என்று கடும் கோபமடைந்த ஜெயலலிதா, உடனடியாக அலெக்சாண்டரை மாற்ற உத்தரவிடுகிறார். யாரோ ஒரு அதிகாரி சொன்னான் என்பதைக் கேட்டு, தன்னை எதிர்த்தவர்களை கொலை செய்யும் அளவுக்குப் போனவர் ஜெயலலிதா. அதற்கு அவர் எப்போதும் தயங்கியதே இல்லை.

1991-1996 காலகட்டத்தில் கொலை-கொள்ளை என்ற பழிபாவங்களுக்கு அஞ்சாத ஜெயலலிதா, 96க்குப் பின், மாற்றம் அடைந்தார் என்று நம்பித்தான் 2001ல் மக்கள் வாக்களித்தார்கள்அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது

இதன் நடுவே, 1999-ல் ஒரு சம்பவம் நடந்தது. 14 மார்ச் 1999-ல் ஜெயலலிதாவின் கணக்கு வழக்குகளை பார்த்து வந்த ஆடிட்டரான ராஜசேகரை ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் செருப்பாலும் கட்டையாலும் தாக்கினர்.   இணைப்புசசிகலாவின் உறவினரான மகாதேவன் ஒரு கட்டையை எடுத்துத் தாக்கினார்இதில் கடுமையான காயமடைந்த ராஜசேகர் காவல்துறையில் புகார் அளிக்கிறார்.   

ஜெயலலிதா, சசிகலா மற்றும் மகாதேவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.   இந்த வழக்கு சிபி.சிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது.   இது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகி விடக்கூடாதே என்பதற்காக, மறுநாள் சட்டப்பேரவையில் ஒரு பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா.   சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, காரணமே இல்லாமல், தாமரைக்கனி எம்எல்ஏ, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலேயே குத்தினார். இணைப்புசிபி.சிஐடியில் அந்த வழக்கை அப்போது விசாரித்தவர், முத்துக்கருப்பன்.     அவர் எப்படி சிறப்பாக விசாரணை நடத்தினாரோ, அதற்குக் கிடைத்த பரிசுதான், ஐஜியாக இருந்தவரை, சென்னை மாநகர ஆணையராக்கியது.

1991 ஜெயலலிதா ஆட்சியைக் கூட நான் மன்னிப்பேன், ஆனால் 2001 ஜெயலலிதா ஆட்சியை நான் மன்னிக்கவே மாட்டேன் என்றார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்திட்டமிட்டு, ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்புகளையும் சிதைத்தார் ஜெயலலிதா.

2000 பிப்ரவரியில் கொடநாடு ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார்.   அக்டோபர் 2000த்தில் டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டார்.   இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா.   அந்த மேல் முறையீட்டை விசாரித்த மலை சுப்ரமணியம் என்ற நீதிபதிகுழப்பமான ஒரு தீர்ப்பை அளித்தார்.   ஆனாலும், என்னால் தண்டனையை நிறுத்தி வைக்க இயலாது என்றார்.

இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனுத் தாக்கல் செய்யக்கூடாது என்ற விதி இருந்தும், வேண்டுமென்றே நான்கு தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்தார்ஏனென்றால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று யாரும் நினைத்து விடக்கூடாதாம். இப்படி அற்பத்தனமாக நான்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்து, நான்கு வேட்பு மனுக்களும், நிராகரிக்கப்பட்டனஇதற்காக தனியாக ஒரு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

பாட்டாளி மக்கள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. இந்தக் கூட்டணி நிறைவேற வேண்டும் என்பதற்காக மூப்பனாரின் வீட்டுக்கே சென்று பேசினார் ஜெயலலிதா.  1996ம் ஆண்டு தேர்தலில், ஊழல் எதிர்ப்பு என்ற காரணத்தின் அடிப்படையில், தமிழ் மாநில காங்கிரஸை தோற்றுவித்த மூப்பனார், ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்ததற்கு, "கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஏற்கனவே மக்கள் தண்டித்து விட்டார்கள்" என்ற காரணத்தைச் சொன்னார்.

தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி  பெற்றது.   அந்த தேர்தல் முடிவுகள், விஜய் டிவியில் அலசப்பட்டுக் கொண்டிருந்தனஅப்போதெல்லாம் விஜய் டிவியில் செய்திகள் வரும்.   அந்த விவாதத்தில் மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலனிடம் ஜெயலலிதா மாறியிருக்கிறாரா என்று கேட்கப்பட்டது.    ஜெயலலிதா தன் கட்சியை நடத்தி வருவதைப் பார்க்கையில், அவர் சற்றும் திருந்தியதாகத் தெரியவில்லை என்றார்ஒரே வாரத்தில், அந்த டிஎன்.கோபாலன் மற்ற பத்திரிக்கையாளர்களோடு சென்னை தலைமைச்செயலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன்
14 மே 2001 அன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா ஆளுனர் பாத்திமா பீவியை சந்தித்தார்.   ஆளுனர் மாளிகையிலிருந்து ஜெயலலிதா வாகனம் வெளியேறுவதற்கு முன்பாகவே, கவர்னரின் பிஆர்ஓ, 12 மணிக்கு பதவிப் பிரமாணம் என்று கூறினார்.   ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, எம்.எல்.ஏவாக இல்லாதவர், இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாமா என்று சட்ட அறிஞர்களை கலந்தாலோசிக்கிறேன் என்று ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட பாத்திமா பீவி அறிவிக்கவில்லைசில நிமிடங்களில் பதவிப்பிரமாணம் என்று முடிவெடுத்தார்.

பின்னாளில் காங்கிரஸை சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி சொன்னது என்னவென்றால், நவம்பர் 2000ம் ஆண்டிலேயே பாத்திமா பீவியோடு ஜெயலலிதா தொடர்பு ஏற்படுத்தி விட்டார் என்பதேபாத்திமா பீவியின் பினாமி ஒருவருக்காக, கொடநாட்டில் ஒரு எஸ்டேட் வாங்கித் தரப்பட்டது என்றும், அதையொட்டியே, ஜெயலலிதாவின் அடிவருடியாக பாத்திமா பீவி செயல்பட்டார் என்றும் கூறினார் அவர்

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியும்,
முன்னாள் தமிழக ஆளுனருமான பாத்திமா பீவி
ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே தன் அராஜகத்தை தொடங்கினார் ஜெயலலிதா.   இரண்டு ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அரசியல் முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அபரிமிதமான மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், ஏற்கனவே ஆணவம் பிடித்த ஜெயலலிதாவுக்கு ஏற்படும் அகந்தையை சொல்லவும் வேண்டுமோ.....

சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கருணாநிதி, அரசு கஜானாவை காலி செய்து விட்டார் என்றார். கஜானா துடைத்து வைத்தது போல இருக்கிறது என்றார்.    கருணாநிதி நான் கஜானாவை காலி செய்யவில்லை, அத்தனையும் அரிசியாக அரசு கிடங்குகளில் இருக்கிறது என்றார்.   விடுவாரா ஜெயலலிதா ?   அத்தனை அரிசியும் புழுத்துப் போன அரிசி என்றார்.   உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள், புழு நெளியும் அரிசியை எடுத்து வந்து சட்டப்பேரவையில் காண்பித்தனர்.

தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு தடியடி படும் பத்திரிக்கையாளர்கள்
 திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, நேராக அரசு உணவுக் கிடங்குக்குள் சென்றார்சன் டிவி செய்தியாளர் சுரேஷ் மற்றும், கேமராமேனோடு கிடங்குக்குள் சென்று, அரிசியை சேம்பிள் எடுத்து, தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலும் காண்பித்தார்வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்குஅரசு அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்ததாக, பொன்முடி மீதும், சன் டிவி செய்தியாளர் சுரேஷ் மீதும் வழக்குஇருவரும் கைது செய்யப்பட்டனர்.   

இதை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைமைச் செயலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்ஆனால் ஜெயலலிதா அசரவில்லைதனது தாக்குதல்களை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

அரசு கிடங்குகளில் இருந்த அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க வேண்டுமல்லவா... ?  தமிழகம் முழுக்க லஞ்ச ஒழிப்பத் துறை அதிகாரிகள் அத்தனை அரசு கிடங்குகளிலும்  சோதனை நடத்த உத்தரவிடப்பட்டனர்ஒரு வாரமாக, இரவு பகலாக சோதனைகள் நடந்தது.   கிடங்குகளில் இருக்கும் அத்தனை அரிசியும் புழுத்த அரிசி என்று நிரூபிக்க வேண்டும்.   கிடங்குகளில் இடமின்மை காரணமாக, சில இடங்களில் ஈரத்தின் காரணமாக சில மூட்டைகளில் அரிசி சேதமடைந்திருந்ததுஎடை குறைவு, சில அரிசி மூட்டைகள் ஈரப்பதத்தோடு இருந்தது என்று, அறிக்கை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து வரப்பெற்ற அறிக்கைகள் தொகுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டனஇந்த அறிக்கைகளை அனுப்புவதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களும், அதிகாரிகளும், இரவு முழுவதும் பணியாற்றினர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்டந்தோறும் 25 விரிவான விசாரணை (Detailed Enquiry) பதிவு செய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதாஅதன்படி, விசாரணை மேற்கொள்ளப்பட்டதுவிசாரணையின் முடிவில், அரசுக்கு எவ்விதமான நஷ்டமும் இல்லை என்ற அறிக்கை அளிக்கப்பட்டது

ஜெயலலிதா பதவியேற்றதும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் பி.பி.நெயில்வால்.   இவர் நியமிக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் மாற்றப்பட்டு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்இவரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் வி.கே.ராஜகோபாலன்.   

புதிய இயக்குநர் பொறுப்பேற்றதும், பழைய வழக்குகள் அத்தனையையும் ஆய்வு செய்தார்.    பல வழக்குகள், விசாரணை முடிந்து இறுதி அறிக்கை ஒப்புதலுக்காக இருந்தனஅவற்றில் ஜெயலலிதா மீதான வழக்குகளும் அடக்கம்.   புலனாய்வு அதிகாரி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என்று அறிக்கை அளித்திருக்கிறார்ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்ய வேண்டும்ஒப்புதல்தானே அளிக்க வே0ண்டும்அதைத்தான் செய்தார் வி.கே.ராஜகோபாலன்.   வந்ததே கோபம் ஜெயலலிதாவுக்கு. உடனடியாக வி.கே.ராஜகோபாலனை போயஸ் தோட்டத்துக்கு அழைத்தார்போயஸ் தோட்டம் சென்ற ராஜகோபாலன், உள்ளே அழைக்கப்படவில்லை. வெளியிலேயே காரில் அமர்ந்தபடி இருந்தார்.   அவர் காரில் காத்திருப்பதை, சிசிடிவியில் பார்த்த ஜெயலலிதா, ஏன் அவரு காரை விட்டு இறங்க மாட்டாராகாரை விட்டு இறங்கி நிற்கச் சொல்லுங்கள் என்றார்வேறு வழியின்றி, காரை விட்டு இறங்கி, காரில் கை வைத்தபடி இரண்டு மணி நேரம் காத்திருந்தார் ராஜகோபாலன். அதன் பிறகு உள்ளே அழைக்கப்பட்டாரா, அல்லது திருப்பி அனுப்பப்பட்டாரா என்பது நினைவில்லை. வந்த வேகத்தில் விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்தார்.  

வழக்கமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு உயர் அதிகாரியை நியமிப்பதென்றால், அவர் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருக்கிறாரா.... அவர் மீது வேறு புகார்கள் உள்ளனவா என்பதையெல்லாம் பார்த்த பிறகே நியமிப்பார்கள்.   இது 1964ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு.

திலகவதி ஐபிஎஸ்
ஆனால் ஜெயலலிதா, திலகவதியை இயக்குநராக நியமித்தார்.  திலகவதி மீது 1988ம் ஆண்டு மற்றும் 1994ல் இரண்டு விசாரணைகள் லஞ்ச ஒழிப்புத் துறையில் நடைபெற்றன.   நியமித்ததோடு அல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அனைத்துக்கும் திலகவதிதான் பொறுப்பு என்று கூடுதல் பொறுப்பையும் வழங்கினார்.  அனைத்து காவல் நிலையங்களும், திலகவதியின் கதைத் தொகுப்பான "திலகவதி கதைகள்"  என்ற இரண்டு தொகுதி நூல்களையும் ஐந்து செட்டுகள் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் திலகவதி.   அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், வேறு வழியின்றி, அந்த கருமத்தை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன் பின்பு திலகவதி, லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே ஊழலில் ஈடுபட்டு, அவர் மீது ரகசிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது டிஜிபி பதவி உயர்வு தாமதப்படுத்தப்பட்டு, அவரை இறுதியாக ஜாபர் சேட் காப்பாற்றினார்

இப்படி ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணையும், சிதிலமடையச் செய்தார் ஜெயலலிதா. இப்போது நாம் பார்த்தது ஒரு துளிதான்.   மீதமுள்ள விவகாரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும்.