Sunday, November 15, 2009

மனித உரிமை நாள் டிசம்பர் 10ல் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு


வரும் டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமை நாளாகும். இந்நாளில் கீழ்கண்ட கோரிக்கைகளோடு "ஒழியட்டும் மரண தண்டனை, மலரட்டும் மனித உரிமை" என்ற தலைப்பில் சென்னையில் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் 5 கோரிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன.

1) பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை நீக்கம் செய்து விடுதலை செய்.

2) நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், தென்தமிழன், எஸ்.ஏ.பாட்சா, முகமது அன்சாரி உள்ளிட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய்.

3) 12 ஆண்டுகளாக விசாரணைச் சிறையாளிகளாக உள்ள குணங்குடி அனீபா, ரஹீம், முபாரக், ராஜா உசேன், ஏர்வாடி காசிம், அலி அப்துல்லா ஆகியோரை விடுதலை செய்

4) போலி மோதல் - காவல் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்.

5) செங்கல்பட்டு பூந்தமல்லியில் உள்ள ஈழத்தமிழர் வதைமுகாம்களை இழுத்து மூடு




என்ற ஐந்து கோரிக்கைகளோடு இம்மாநாடு நடைபெற உள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும், பெருந்திரளாக பங்கு கொள்ள, தமிழக மக்கள் உரிமைக் கழகம் விடுக்கிறது.



சவுக்கு

No comments:

Post a Comment