Monday, March 15, 2010

கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே… …




கருணாநிதி பேசுவதையும், கடிதமாகவும், கேள்வி பதில் அறிக்கைகளாகவும், அவராகவே இலக்கியம் என்று கருதிக் கொண்டு எழுதும் கவிதைகளாகவும் கொட்டப்படும் விஷமத்தனமான உளறல்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி ஊடகங்களும், உங்கள் முகத்தில் அறைவது போல கொண்டு வந்து சேர்த்தே தீரும்.

கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள், கட்டண கழிப்பிடத்தை திறந்து வைத்தாலும், அது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிடப்படும். கருணாநிதி பெங்களுரில் உள்ள மகள் செல்வி வீட்டுக்குச் சென்று தனக்கு மிகவும் பிடித்த நாட்டுக் கோழியை விரும்பி உண்டதை செய்தியாக நக்கீரன் வெளியிடுகிறது.

தேவைக்கு அதிகமாக, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சமூகம் அங்கீகரித்திருக்கம் ஒழுக்க கோட்பாடுகளை மீறி, நெருக்கடியின் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து, அக்குடும்பத்தை மக்கள் வரிப்பணத்தில் பராமரித்து வரும் சிஐடி காலனிக்கு கருணாநிதி இரண்டு நாட்கள் செல்லவில்லை என்றால் அதையும் செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் இருக்கின்றன.

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தின் செய்திகள் அவர்களுக்கு பொழுது போக்கு. ஆனால் லட்சக்கணக்கான தமிழக மக்கள், தங்களின் பிரச்சினைகள் செய்தியாக வேண்டும் என்று தவம் இருக்கிறார்கள்.


ஆனால் இந்த ஊடகங்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த ஊடகங்களின் கவனத்தை திருப்பவாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் அவ்வப்போது, ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், கருத்தரங்கங்களும் நடத்த முனைகிறார்கள்.

உண்ணாவிரதமோ, ஆர்ப்பாட்டமோ, கருத்தரங்கமோ, எதுவாக இருந்தாலும், அதை நடத்துவதில் எத்தனை சிரமம் என்பது அந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மட்டுமே அறிவார்கள்.

நிகழ்ச்சிக்கு இடத்தை தேர்வு செய்வதில் இருந்து, அந்நிகழ்ச்சிக்கு துண்டறிக்கை தயார் செய்வது, போஸ்டர் தயார் செய்வது, மைக் ஏற்பாடு செய்வது, விழாவுக்கு வருபவர்களுக்கு தேநீர் அல்லது மதிய உணவு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களை அழைப்பது, அழைப்புக் கடிதம் கொடுப்பது, போலீஸ் அனுமதி பெறுவது என்று ஒரு நிகழ்ச்சியினுள் பொதிந்திருக்கும் பணிகள் ஏராளம். இப்படி எல்லா ஏற்பாடுகளையும், ஒரு பொது தேவைக்காகவும், பரந்து பட்ட உழைப்பாளி மக்களின் தேவைகளுக்காகவும், சமூக ஆர்வம் உள்ள அனைவரும் செய்தே வருகிறார்கள்.


இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தவுடன் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று காலையில் காவல்துறை, உங்கள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அனுமதி மறுக்கும் கடிதத்தை வழங்கினால் எப்படி இருக்கும் ?


கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற மூன்று நிகழ்வுகள். முதல் நிகழ்வு. ஈழத் தமிழர்களை, தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி வதை முகாம்களுக்குள் அடைத்து வைப்பதை எதிர்த்து 13.03.2010 அன்று மாலை சென்னை மெமொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் முதல் நாள் இரவு, அனுமதி மறுக்கப் பட்ட கடிதத்தை காவல்துறை வழங்கியது.

அடுத்த நிகழ்வு, சென்னையில் குடிசைப் பகுதி மக்களை சென்னை நகரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் சென்னையை விட்டு அவர்களை விரட்டியடிக்க திட்டமிட்டு அரசு நடத்தும் அராஜக நடவடிக்கைகளை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டு, விழாவுக்கு சீமான், திருமாவளவன் போன்றோரை அழைத்து, எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்டு நிகழ்ச்சி தொடங்கும் நாளன்று காலை, நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது, காவல்துறை அனுமதி மறுக்கப் பட்டது என்ற கடிதத்தை கொடுத்தது. நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது அனுமதி மறுத்தால் என்ன செய்வீர்கள் ? விழா தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியிடச் சென்ற தோழர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது காவல்துறை.

மூன்றாவது நிகழ்வு. சேலத்தில் காவல்துறையின் சித்திரவதைகளுக்கும், வன்முறைகளுக்கும், போலி மோதல் படுகொலைகளுக்கும் எதிராக இன்று (செவ்வாய்) நடைபெற இருந்தது. சேலம் சுபிக்ஷா அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருந்த கருத்தரங்கில் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.ரத்தினம், ப.பா மோகன், புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆராய்ச்சி செய்து காவல்துறையின் சித்திரவதை மற்றும் அராஜகங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை புகழேந்தி தயார் செய்து, சென்னையிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.


சுபிக்ஷா அரங்க உரிமையாளரை மிரட்டி, அரங்கை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விட்டது காவல்துறை என்று இன்று காலை தொலைபேசி வாயிலாக தகவல் தெரிந்தது.

நியாயமான ஜனநாயக வழியிலான போராட்டங்கள் எதையுமே நடத்த விடாமல் காவல்துறை இப்படி தடுப்பது கருணாநிதிக்கு தெரியாமலா நடக்கிறது என்கிறீர்கள் ? அப்படி தெரியாமல் நடந்தாலும், இப்படிப்பட்ட பொறுக்கி காவல்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு செயலிழந்த முதலமைச்சர் எதற்கு நமக்கு ?

உண்மை என்னவென்றால், கருணாநிதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது, மக்களின் நிலை என்னவென்பதெல்லாம் பற்றி துளியும் அக்கறை இல்லை.

இருந்தால் ஒரு முதல்வர், பிரியாணி பொட்டலம் விநியோகித்துக் கொண்டிருக்கும் அவலத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? உழைப்பாளி மக்களின் உழைப்பை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப் படுவதை சவுக்கு வரவேற்கவே செய்கிறது என்றாலும், இந்தப் பிரியாணி பொட்டலத்தை வழங்க, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவசியமா ?

இதில் கலந்து கொண்ட இன்னொரு பெரும்புள்ளி, இந்து ராம். கருணாநிதியிடம் “இந்நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் ஒலிபரப்பப்ட்டனவே” என்று கேட்டதற்கு, பாட்டுக்கு இந்தி நன்று, ஆனால் நாட்டுக்கு தேவையில்லை என்று பதில் அளித்து, அதை தலைப்புச் செய்தியாகவும் ஆக்கிய கருணாநிதியை என்னவென்று சொல்வீர்கள்.


கருணாநிதியை திட்டி, விமர்சித்து பதிவு எழுதுவதற்கு சவுக்குக்கே சலிப்பு ஏற்பட்டாலும் என்ன செய்வது, மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…

கருணாநிதி கக்கூஸ் போனாலும் அது செய்தியாக வேண்டும். அதை நாம் படிக்க வேண்டும். ஆனால் உழைப்பாளி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி யாரும் எங்கேயும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் ஒரு அவல நிலை என்றுதான் மாறப்போகிறதோ.. ..


கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.

சவுக்குக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும், கையறு நிலையில் மனம் அங்கலாய்ப்பதை வேறு என்ன சொல்லி ஆற்றுவது ?


சவுக்கு

14 comments:

  1. இப்போது உள்ள மக்கள் ஆட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை தேடிக்கொண்டு இருக்கின்றேன் .

    ReplyDelete
  2. //கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது//

    தங்கள் சாபம் பலிக்கட்டும் !

    -G

    ReplyDelete
  3. The Common people`s 13 Mar evening was robbed by our national Leaders visit to the Opening ceremony in Chennai. At Chadikhar one person died due to OUR PM visit to the hospital. Though he apologized then, still it continues eleswhere. Were they been elected to serve us or to rule and ruin the country? Where was the law and order in Palli Palayam on 11 Mar when Mr Velusamy was murdered? where are we pushed? Back to the OLD DARK COLONIAL DYNASTY RULE !!!!!!

    ReplyDelete
  4. சவுக்கடி இதுதானா?

    ReplyDelete
  5. சவுக்குக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும்



    அப்படி சொல்லாதீங்க. சாபம் என்பது என்ன. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மனிதர்களின் உணர்ச்சி பிரவாகம். நிச்சயம் பழிக்கும்.

    ReplyDelete
  6. அம்மா ஆட்சியில் வாங்கின ஆப்புகளையெல்லாம் திரும்ப வாங்க வேண்டுமென நினைக்கிறீர்கள் போலும். . . .

    அடுத்து வர இருக்கும் கொடநாட்டு கொலதெய்வத்தின் ஆட்சியில் உங்கள் லட்சியங்கள் எல்லாம் ஈடேற வாழ்த்துகள். . . .

    கருனாநிதி குடும்பம் நாசமாய் போக என் சாபத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. //கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.//

    இது நடந்தாலும் தமிழக மக்களின் தலையெழுத்து ஒரேயடியாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. செல்வி ஜெயலலிதா வந்தாலும் இவரை விட இன்னும் எப்படி கேவலமாக நடந்து கொள்ளலாம் என்றுதான் பார்ப்பார். ஜனநாயக படுகொலை செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். இருப்பினும் ஏதோ தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது எமக்குப் புரிகிறது.

    ReplyDelete
  8. தமிழக மக்கள் உரிமை கழகம் ன்னு பேரு வச்சிட்டு பிரபாகரன் படம் போட்ருக்கீங்க....

    அந்த இடத்துல உங்க படத்த போடுங்க...எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி. . .

    பெரியாரை பாருங்க எவனை கட்டீட்டு அழுதாரு...அவருதான்யா சிங்கம்....யோசிங்க பாஸ்!

    சவுக்கால அடிச்ச மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணாம விட்றாதீக!

    ReplyDelete
  9. பொதுவாக தமிழ் மக்கள் உணர்வை தீக்குச்சிக்கு ஒப்பாக சொல்வார்கள். ஆனால் இப்பொழுது நம் உணர்வே எரிந்து போன தீக்குச்சி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதோ? என்று நினைக்கிறேன்!
    சரியான அடி!

    ReplyDelete
  10. சிங் மற்றும் அன்னை வருகைக்காக , மீனவர்களையே கடலுக்கு போககூடாது என உத்தரவு
    போட்டுள்ளார்கள்..( பாதுகாப்பு பிரச்சனையாம்...)

    அவர்கள் மக்களை காப்பாற்ற பாடுபடுகிறார்களா?.. இல்லை அவர்கள் வயிற்றில் அடிக்கிறார்களா?..

    ReplyDelete
  11. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…

    :)
    ஊடகங்களுக்கு பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தரும் போது அவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும் ? சட்டசபை திறப்பு அன்று மட்டும் நான்கு ஐந்து பக்க சிறப்பு மலர் வழங்கப்பட்டிருக்கிறது :(

    ReplyDelete
  12. தமிழ்ச்செல்வன்March 28, 2010 at 3:20 AM

    //கருணாநிதியை திட்டி, விமர்சித்து பதிவு எழுதுவதற்கு சவுக்குக்கே சலிப்பு ஏற்பட்டாலும் என்ன செய்வது, மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…//

    இதுதான் திருநெல்வேலிக்கே அல்வா என்பது...

    //கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.//

    கூடிய விரைவில் நடக்கும். அதற்கான அறிகுறி புலப்பட ஆரம்பித்து விட்டது.

    ReplyDelete
  13. பொறுக்கி கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கண்ணீர் விட வேண்டும், விரைவில் நடக்கும். அதற்கான அறிகுறி புலப்பட ஆரம்பித்து விட்டது.கருணாநிதியின் குடும்பம் நாசமாய் போக என் சாபத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. அந்த இடத்துல உங்க படத்த போடுங்க...எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் காலையே நக்கீட்டு இருக்கறது. நமக்கு நாமதான் தலைவர்னு சொல்ற தன்னம்பிக்கை வரனும் அதான் உரிமைக்கான முதல் படி//

    SABAASH .. SAABAASH.. These people thinks only those who support LTTE prabakaran are tamils

    ReplyDelete