Tuesday, December 22, 2009

தமிழின் தறுதலை மகன்
கருணாநிதிக்கு விருதுகளும், புகழ்ச்சிகளும், எப்படி சலிக்கவில்லையோ, அதே போல, கருணாநிதியை வாய் நிறைய திட்டுவதற்கும், சபிப்பதற்கும், “சவுக்குக்கும்” சலிப்பதேயில்லை.

கடைசியாய் நடந்த பாராட்டு விழா, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 2009 டிசம்பர் 21ல் நடைபெற்றது. அவ்விழாவில் கருணாநிதிக்கு “தமிழ்த் தலைமகன்” விருது வழங்கப் பட்டது. பாராட்டை ஏற்றுக் கொண்டு பேசிய கருணாநிதி,

“கடந்த 3 மாதங்களில் வள்ளுவர் கோட்டத்தில் 4வது முறையாக பாராட்டு விழா. இன உணர்வை, தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பெருமக்களின் ஆர்வம் மடை உடைத்து செல்லும் அளவுக்கு இவ்விழா நடந்து கொண்டிருக்கிறது.


முத்துவேலர், அஞ்சுக தாய்க்கு நான் 3வது மகனாக பிறந்தேன். ஆனால் இன்று என்னை தலைமகன் ஆக்கியிருக்கிறீர்கள். அதற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம். “ என்று கூறினார்.

ஊரில் இருக்கும், தமிழ்ச் சங்கங்கள், அருந்ததியர் சங்கம், தேவர் சங்கம், வன்னியர் சங்கம், முதலியார் சங்கம், நாயுடு சங்கம், கவுண்டர் சங்கம், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் நலவாழ்வுச் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், துப்புறவு தொழிலாளர் சங்கம், பனை மரம் ஏறுவோர் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று தமிழ்நாட்டில் சங்கம் என்று வைத்திருப்பவர்கள் ஒருவர் விடாமல் அழைத்து, பாராட்டு விழா நடத்தச் சொல்லி தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தாத சங்கங்களே இருக்கக் கூடாது என்னும் அளவுக்கு, ஒவ்வொரு சங்கமாக
அழைத்து பாராட்டு விழா நடத்த உத்தரவிட்டு, அந்த பாராட்டு விழாவில் புகழ்ச்சி மழையில் நனைந்து, உச்சி குளிர, திகட்டத் திகட்ட அனைவரும் பாராட்டி, அதற்குப் பிறகு ஏற்புரை நடத்தி, அந்த பாராட்டு விழாவே தனக்கு விருப்பமில்லாமல் நடப்பது போலவும், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்வது போலவும், கருணாநிதி நடிப்பது என்பது, பார்த்துப் பார்த்து புளித்துப் போகும் அளவுக்கு நடந்தேறி விட்டது.

இப்படி அனைவரையும் கட்டாயம் பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் என்று கருணாநிதி தனது அமைச்சரவை சகாக்கள் மூலமாகவும், வைரமுத்து மூலமாகவும், இந்தியா முழுவதும், உள்ள தமிழர்களையும், வேறு மொழி பேசுபவர்களையும் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் தொழில் செய்வோர், கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுத்தாலும், அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு இப்படி உரையாற்றுவார்.

“உலகத்தின் மிகப் புராதானமான தொழில் இந்தப் பாலியல் தொழில்தான். தமிழ் கூறும் நல்லுலகு, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக் கேற்ப, தனக்கு ஏற்ற வகையில் பாலியல் தொழிலைச் செய்து வந்ததற்கு, தமிழ் இலக்கியங்களே சான்று. சிலப்பதிகாரத்திலே, மாதவியை விடவா பாலியல் தொழில் செய்பவரை பற்றி புகழ்ந்துரைக்க வேண்டும்? கற்புக்கரசியாம், என்னால், கடற்கரையிலே சிலையெடுக்கப் பட்டதால் புகழ் பெற்ற கண்ணகியிடம் இருந்து கோவலனை தட்டிப் பறித்ததில் இருந்தே, மாதவியின் “திறமை“ புரியவில்லையா ?

நான் ஆரம்ப காலத்திலே கழகப் பேச்சாளராக இருக்கும் முன், திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே பாலியல் தொழிலாளிகளுக்கு நானும், மறைந்த எனது ஆருயிர் நண்பர், கண்ணதாசனும் ஆதரவு அளித்துள்ளோம். இந்த விபரங்களை நண்பர் கண்ணதாசன் விபரமாக “வனவாசம்“ நூலில் எழுதியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.


சிலப்பதிகார நாயகி, மாதவியின் பெயரால், சென்னைக்கு அருகில், “பாலியல் தொழிலாளிகள் பூங்கா“ ஒன்றை அமைக்க கழக அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக கட்டப் பட்டு வரும், தலைமைச் செயலக கட்டிடத்தில், பாலியல் தொழிலாளிகளுக்கு சிறப்புத் துறை ஒன்றை அமைக்க இடம் ஒதுக்கப் பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், புதிதாக கட்டப் பட்டு வரும், அண்ணா நினைவு நூலகத்தில், பாலியல் தொழில் தொடர்பான புத்தகங்களை வைக்க, தனியே இரண்டு அலமாரிகளை ஒதுக்கச் சொல்லி கழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்களா ?தமிழ்நாட்டிலே சில பேர், பாலியல் தொழிலாளிகள் கூட, இந்தக் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்களே, என்று குமையக் கூடும். குமுறக் கூடும். கூடி அழக் கூடும். குற்றம் சொல்லக் கூடும். கூக்குரலிடக் கூடும், கொடுஞ்சொற்களை வீசக் கூடும். ஆனால், அதற்காகவெல்லாம் பயந்து, அஞ்சி, அவமானப்பட்டு, ஆவேசப் பட்டு, பாராட்டு விழா வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு சுயமரியாதையும் இல்லை, அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்ககவும் இல்லை, திராவிட இயக்கம் எனக்கு அதை கற்றுத் தரவும் இல்லை. “

என்று உரையாற்றுவார் கருணாநிதி.


கருணாநிதியை தற்போது பீடித்திருப்பது NPD என்று அழைக்கப் படும், நார்சிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர். இது நகைச்சுவைக்காக சொல்லப் படுகிறது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். உலக சுகாதார நிறுவனம் “சர்வதேச நோய் மற்றும் நல்வாழ்வு பிரச்சினைகளுக்கான புள்ளிவிபர வகைப்படுத்தல்“ International Statistical Classification of Diseases and Health Related Problems என்ற பட்டியலில் இந்நோய் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோய்க்கான அறிகுறிகள்.

1) தன்னைப் பற்றிய அதிமுக்கியத்துவம். (சாதனைகள், திறமைகளைப் பற்றி மிகைப் படுத்தி நினைத்தல், யதார்த்தத்துக்கு புறம்பாக, தன்னைப் பற்றிய மிகை நினைப்பு)

2) வெற்றி, புகழ், அதிகாரம், அழகு பற்றிய மிதமிஞ்சிய கற்பனை

3) தான் மிக மிக முக்கியமான நபர் என்றும், தன்னைப் பற்றி, மிகுந்த அறிவாளிகள்தான் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஏற்படும் எண்ணம்

4) தனக்கு எப்போதும் முக்கியத்துவமும், சிறப்பு கவனமும் வழங்கப் படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு

5) அடுத்தவரின் சாதனைகளையும், வெற்றிகளையும் தனதாக கருதுதல்

6) அடுத்தவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள மறுத்தல்.

7) எப்பொழுதும் அடுத்தவரைப் பார்த்து பொறாமை பட்டு விட்டு, தன் மீது அடுத்தவருக்கு பொறாமை என்று கூறுதல்.

8) அகம்பாவமாய், எவரையும் மதிக்காமல் நடத்தல்

என்ற அறிகுறிகள் இந்நோய் பீடித்தவருக்கு ஏற்படும் என்று, இந்நோய் குறித்த ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அறிகுறிகள் கருணாநிதிக்கு இருக்கிறதா இல்லையா என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


இந்நோய்க்கு இந்தப் பெயர் வந்த காரணம் மிக சுவையானது. கிரேக்க புராணத்தில், அந்நோட்டைச் சேர்ந்த ஒரு நார்சிசஸ் என்ற அழகான இளைஞன் குளத்து நீரில், தனது பிம்பத்தைப் பார்த்து அப்பிம்பத்தை காதலிக்கத் தொடங்கினான் என்ற கதை உண்டு.1911ல் ஓட்டோ ராங்க் என்ற ஆஸ்திரிய நாட்டு மனவியல் ஆராய்ச்சியாளர் முதன் முதலாக நார்சிசம் ஒரு வியாதி என்று கண்டறிந்து சொன்னார்.

அதன் பிறகு இந்த வியாதி பற்றி பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

86 வயது ஆகும் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள இந்த வியாதிக்கு, இந்த வயதில் சிகிச்சை உண்டா இல்லையா என்று உலகில் உள்ள மனவியலாளர்கள் அனைவரையும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு சவுக்கு கேட்டுக் கொள்கிறது.
இப்படிப்பட்ட வியாதியால் பீடிக்கப் பட்டிருக்கும், கருணாநிதிக்கு வழங்க வேண்டிய பட்டம், தமிழின் தலை மகன் அல்லவே.

தமிழின் தறுதலை மகன் அன்றோ ?

சவுக்கு


தயவு செய்து வாக்களியுங்கள் நண்பர்களே

3 comments:

 1. Dai,

  LTTE leader pirabharanukkuu ennadaa pidichu ponathu? Hysteria or mania or what else??You make the whole mustakes and blame india and karunanithy for everything?When the late leader commanded for the sri lankan tamils not to partake in the last presidential election did he consulted karunanithy or india?He did everything to his own wish and whenever he is in trouble india has to come and save him??hahahaha what a funny expectations?In 1987 Rajiv Gandhi saved him,then in 1990 Premadasa saved him from the IPKF,in 2009 noone was there to save him.The leader told that they dont want india to help them in any way and they can solve their problems alone and now his followers condemn india and karunanithy?

  ReplyDelete
 2. Shiva,

  One of the reason for Thamizh's failure is because of half-baked people like you.
  Never cared for opening your mind to learn the truth?

  ReplyDelete
 3. Please,dont spoil and destroy name and fame of Prabhakaran and many genuine people through your verbal combat.this is good for nothing.

  ReplyDelete