Tuesday, May 26, 2009

உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.நன்றி தினமணி


ஒரு வழியாய் கருணாநிதியின் "உள்ளே வெளியே" ஓரங்க நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஒரு வாரமாய் தேசிய ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும், இந்நாடகம் குறித்த செய்திகள் புளித்துப் போகும் அளவுக்கு வந்தன.

2004 பாராளுமன்ற தேர்தலில் 145 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி இன்று 206 இடங்களைப் பெற்றுள்ளது என்பதை கருணாநிதி மறந்து, மீண்டும் 2004ல் உள்ளது போல் பிரதமர் பதவி தவிர அத்தனை பதவிகளையும் கேட்டுப் பெற்று விடமுடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டே டெல்லி சென்றார். தன்னுடன் அவரது "பெரிய" குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், அதிகாரிகளையும், அமைச்சர் பெருமக்களையும் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வாங்கி அதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தார். ஆனால், 206 இடங்களைப் பெற்ற காங்கிரசின் இறுமாப்பு எப்படி இருக்கும் என்பதை கண்கூடாகப் பார்த்தார். 272 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் மெஜாரிட்டி என்ற நிலையில், போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க கட்சிகள் வரிசையில் நிற்கும் நிலையில் 322 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்து தெனாவெட்டாய் இருந்தது காங்கிரஸ் கட்சி. தன் பழைய செல்வாக்கை இழந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் பதவி தேவைகளை நிறைவேற்ற இயலாமல், டி.ஆர்.பாலுவை விட்டு, "வெளியில் இருந்து ஆதரவு" என்று அறிவிக்க சொல்லிவிட்டு, படை பரிவாரங்களோடு, டெல்லியிலிருந்து கிளம்பினார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறைய வருவாய் வரக்கூடிய இலாக்காக்களை காங்கிரஸ் ஒதுக்க மறுத்ததுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தன்னுடைய பாச்சா பலிக்காது என்று நன்கு புரிந்தவுடன், காங்கிரஸ் கொடுத்த மந்திரி பதவிகளை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தற்போது ஏற்றுக் கொண்டு குடும்ப மந்திரிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தன்னுடைய முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வீல் சேரில் டெல்லி சென்று சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்து இரண்டு நாட்கள் தங்கி பேரம் நடத்தத் தெரிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கையில் என்ன செய்தார் என்று ஞாபகம் இருக்கிறதா ?

1) மன்மோகன் சிங்குக்கு கடிதம்
2) சட்டசபையில் தீர்மானம்
3) மனிதச் சங்கிலி
4) எம்.பி. பதவி ராஜினாமா என்ற நாடகம்
5) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை
6) டெல்லிக்குத் தந்தி
7) சோனியாவுக்கு கடிதம்
8) ஒரு நாள் பொது வேலைநிறுத்தம்
9) மீண்டும் சட்டசபையில் தீர்மானம்
10) மீண்டும் டெல்லிக்கு தந்தி
11) குடும்பத்துடன் நான்கு மணி நேர உண்ணாவிரதம்


ஆனால், குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவிக்கான பேரம் என்றதும், விரைவாக டெல்லி சென்று பேரம் நடத்திவிட்டு, பேரம் படியவில்லை என்றதும், பதவியேற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டு கடும் கோபத்துடன் திரும்பி வந்தார். இப்போது மந்திரி பதவி கேட்டு தந்தி அடிப்பது தானே ? தந்தி அடித்தாலோ கடிதம் அனுப்பினாலோ பதவி கிடைக்காது என்று தெரிந்துதான், நேரில் டெல்லி சென்றார்.


இதே முயற்சியை கருணாநிதி இலங்கை தமிழர் விஷயத்தில் எடுத்திருந்தாரேயானால், எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் ? எத்தனை பேர் உடல் ஊனமாகாமல் இருந்திருப்பர் ?

குற்றுயிரும் குலை உயிருமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் மருத்துவ வசதி இல்லாமல் ஈழத்திலே அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், பதவி பேரம் நடத்தும் இந்தக் கருணாநிதியை என்ன சொல்வது ?

... ச்சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு

/ஒப்பாரி/

No comments:

Post a Comment