Friday, September 3, 2010

ரட்சிக்கப் பட்ட ஜெகதரட்சகன்.



ஜெகதரட்சகன். இந்தப் பெயர் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, வன்னியர் சங்க தலைவர் என்ற வகையில், அங்கங்கே சுவர் விளம்பரங்களில் மட்டும் தென்படும். வன்னியர் சமுதாயத்தில் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு ஒன்றும் இல்லை. கருணாநிதி, இவரை ராமதாசின் செல்வாக்கை உடைப்பதற்கென்று பயன் படுத்திக் கொண்டார்.

தேர்தல் நேரத்தில் ஜெகதரட்சகனும் தனது சங்கத்தை கலைத்து விட்டு, திமுகவுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக ஆனார்.

எம்.பி ஆக ஆனதும், பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கும் வகையில் மந்திரி சபைக்கு பரிந்துரைக்கப் பட்டார் ஜெகதரட்சகன்.

திமுக எம்.பியாக ஆகும் முன், ஜெகதரட்சகன், “கல்வித் தந்தையாக“ இருந்தார். அவரின் பாலாஜி பல்மருத்துவக் கல்வி மூலமாக கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். வெறும் கல்வி வியாபாரத்தின் மூலமாக பெரும் செல்வத்தை ஈட்ட முடியாது என்பதால், தற்போது தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக மட்டுமல்லாமல், “கருணாநிதி பாராட்டு விழா துறையையும்“ கூடுதலாக கவனித்து வருகிறார்.

இப்படிப் பட்ட ஜெகதரட்சகன் கடந்த ஆண்டு ஜுன் 2009ல் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனம், வியாபாரமாகும் கல்வியை படம் பிடித்துக் காட்ட ஒரு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. (இதற்கு நல்ல தமிழ் வார்த்தைகள் இருந்தால் அறிஞர்கள் கூறவும்) இந்த ஆபரேஷனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிக்கியது இரண்டு கல்லூரிகள். ஒன்று ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகம் மற்றொன்று, ஜெகதரட்சகனின் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி.



ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் கேமரா முன்பு ஒருவர் மருத்துவ மேல்படிப்புக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று பேரம் பேசி சிக்குகிறார். பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் பல் மருத்துவக் கல்விக்கான இடத்துக்கு இதே போல பேரம் பேசி சிக்குகிறார்.

இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து, மத்திய அரசிடமிருந்து இந்தக் கல்லூரிகளிடம் அறிக்கை கேட்பதும், விசாரணைக்கு உத்தரவிடுவதும் என நடவடிக்கைகள் தூள் பறந்தன. அதன் பிறகு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயே சிபிஐ வலையில் சிக்கியதும், இந்த விவகாரம் மறக்கப் பட்டது.

இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வராமலே நடந்தேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தக் கல்விக் கட்டணக் கொள்ளையையும், மருத்துவ சீட்டுகளை ஏலம் போடும் விஷயத்தையும், விசாரிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்தது உண்மையே. இதற்காக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டது. சிபிஐ ஒரு விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டுமென்றால், சம்பந்தப் பட்ட மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். இதற்கான கடிதத்தை மத்திய புலனாய்வு நிறுவனம், மாநில அரசிடம் அளிக்கிறது.

இந்த கடிதம் மாநில அரசை வந்து அடைந்த போது ஒரு சுவையான நிகழ்வு நடக்கிறது.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்துக்கும் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டுக்கும் ஒரு மனத்தாங்கல் ஏற்படுகிறது. ஜாபர் சேட்டின் அதிகாரத்தை மதிக்காமல் வெங்கடாச்சலம் நடந்து கொள்கிறார் என்று நினைத்த ஜாபர் சேட், வெங்கடாச்சலத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க நினைக்கிறார்.

விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி கேட்டு வந்த சிபிஐ கடிதம் உள்துறை செயலரை அடைந்த உடன், உள்துறை செயலர் மாலதியும் ஜாபர் சேட்டும் இதைப் பற்றி விவாதித்து, இந்த விசாரணை நடந்தால், திமுக அமைச்சர் ஜெகதரட்சகனை இது பாதிக்கும் என்று தெரிந்தும், கருணாநிதிக்கு தெரியாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்கள். இதற்கான ஆணை அரசாணை எண் 593 உள்துறை நாள் 25.06.2010ல் வெளியிடப் படுகிறது.

இந்தத் தகவல் அறிந்த வெங்கடாச்சலம், ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர் மூலமாக கருணாநிதியை அணுகுகிறார். கருணாநிதி ஜாபரை அழைத்து என்ன விபரம் என்று கேட்கிறார்.

ஜாபர் சேட்டும் மாலதியும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்காவிட்டால் மாநில அரசுக்கு மிகுந்த கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறுவதை கேட்டு கருணாநிதி அமைதியாகிறார்.

இதற்கு முன்பு, இந்த ஸ்டிங் ஆபரேஷன் நடந்த போது, பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் கேமராவில் பணம் கேட்டு சிக்கியவர்கள் இருவர். ஒருவர் ஜான்சன். மற்றொருவர் லட்சுமி. இந்த இருவரும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலகர்கள் (Administrative Officers). இந்த இருவர் மீதும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், இவர்கள் இருவரும் நிர்வாகத்திற்கே தெரியாமல் ஏமாற்றி பணம் வாங்கி விட்டதாக ஒரு புகாரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்கின்றனர்.

இந்தப் புகார் குரோம் பேட்டை காவல் நிலைய குற்ற எண் 290/2009 என்ற எண்ணில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 511 (குற்றம் செய்ய ஆயத்தம் செய்தல்) ஆகிய இரு பிரிவுகளின் பதிவு செய்யப் படுகிறது.

விசாரிக்க மாநில அரசின் அனுமதி அனுமதி கேட்ட கடிதம் வந்த உடனேயே, அவசர அவசரமாக குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி அளித்த புகாரில் ஜான்சன் மீதும் லட்சுமி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கின்றனர். இந்தக் குற்றப் பத்திரிக்கை தாம்பரம் இரண்டாம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படுகிறது. இந்த வழக்கு எண் சி.சி. 528/2010.


சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு அனுமதி அளித்த விவகாரம் ஜெகதரட்சகனுக்கு தெரிய வருகிறது. ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய ஜான்சன் மற்றும் லட்சுமியை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படுகிறது. இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே எங்கள் மீது குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடரப் பட்டு விட்டது. அதனால், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 22.07.2010 அன்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது.

இதற்கு நடுவே தாம்பரம் இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் லட்சுமி மற்றும் ஜான்சன் மீதான வழக்கு 13.08.2010 அன்று விசாரணைக்கு வந்த போது இவருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். குற்றவாளிகள் இருவருக்கும் நீதிபதி தலா ரூ.5000/- அபராதம் விதித்து வழக்கை மூடுகிறார்.

இது போலவே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில், போரூரிலும் ஒரு புகார் வழங்கப் பட்டு அதுவும், இதே போல மூடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

இதில் தப்பித்தாலும், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, 1500 கிலோ தங்கப் புகழ் கேதன் தேசாய் மீதான வழக்கு விசாரணையில் சிபிஐ, அந்தக் கல்லூரி உரிமையாளரை நெருக்கும் போது, அந்த வலையில் ஜெகதரட்சகனும் வருவார் என்று தெரிகிறது.

ஒரு போக்குவரத்துக் காவலர், 200 ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டார் என்றால் அவரை இடை நீக்கம் செய்து, அவரை கைது செய்து, அவர் மீது, நீதிமன்ற வழக்கு, துறை நடவடிக்கை என்று அவரின் வாழ்க்கையை நாசம் செய்யும், இந்த அரசுத் துறையும், நீதித் துறையும், சமூகத்தில் பெரிய மனிதர்களை காப்பாற்ற எப்படி கூட்டு சேர்ந்து வேலை செய்கிறது என்று பாருங்கள்.

லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மீது என்ன குற்றச் சாட்டு தெரியுமா ? கேதன் தேசாயோடு சேர்ந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து கொடுக்காமல், வசதிகள் இருப்பது போன்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்து, லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூட்டுச் சதியில் ஈடுபட்டு, மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி பெற்று நடத்தி வந்துள்ளனர் என்பதுதான் அந்தக் குற்றச் சாட்டு.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐக்கு, ஆகஸ்டு 17 அன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. தடை விதித்த நீதியரசர் வேறு யாருமல்ல ? நமது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நீதியரசர் சி.டி.செல்வம் தான் அது. சவுக்கு வாசகர்களின் நினைவுக்காக அந்த நீதியரசரின் படத்தை சவுக்கு மீண்டும் ஒரு முறை வழங்குகிறது.



வெறும் பேச்சோடு நிற்பது சவுக்குக்கு பிடிக்காது. செயலிலும் இறங்க வேண்டும் அல்லவா ? அதனால், தமிழக மக்கள் உரிமைச் கழகம் சார்பாக, மத்திய புலனாய்வுத் துறைக்கு விரிவான புகார் ஒன்று அனுப்பப் பட இருக்கிறது.

சவுக்கு

26 comments:

  1. //திமுக எம்.பியாக ஆகும் முன், ஜெகதரட்சகன், “கல்வித் தந்தையாக“ இருந்தார். அவரின் பாலாஜி பல்மருத்துவக் கல்வி மூலமாக கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்//

    FYI...BHARATH DEEMED University என்ற சேலையூரில் உள்ள பல்கலைக்கழகம் ஜெகத்ரச்சகனுக்கு சொந்தமானதுதான்

    ReplyDelete
  2. ஜெகத்ரச்சகன் திருச்சி அருகே ஒரு DISTILLED FACTORY (சாராய ஆலை) ஒன்று சொந்தமாக கட்டி வருகிறார். அதற்கு நில தடி நீர் எடுக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்தி சிறிது நாட்களுக்கு முன் வெளியானது..

    TR BALU வேறு தனியாக KINGS DISTILLERY என்ற சாராய ஆலை ஒன்றை புதுக்கோட்டை அருகே கட்டி வருகிறார். அதற்கு பொது மக்கள் கருத்து கேட்பு நடக்கப்பட்டு போலீஸார் தடி அடி நடந்தது தனி சோகம்

    ReplyDelete
  3. சவுக்கு ,
    தொடரட்டும் உங்கள் புலனாய்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. sir, these peoples are want more and more money, till thier death..

    panam thinnum peikal.

    ReplyDelete
  5. //இவர்கள் இருவரும் நிர்வாகத்திற்கே தெரியாமல் ஏமாற்றி பணம் வாங்கி விட்டதாக ஒரு புகாரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்கின்றனர்//

    எவ்வலவோ பண்ணிடோம் இத்த பண்னமாட்டோமா!!!... ஜுஜுபி ...

    ReplyDelete
  6. ethanai savukkadi koduthalum ivargal yarum thirunthuvadhillai. veykam ketta arasialviyaathigal...

    ReplyDelete
  7. இவன் கருணாநிதி தன்னுடைய கொட்டடியை தக்க வைப்பதற்காக ஊரையே குட்டிச்சுவராக்கி, நீதித்துறை ,காவல்த்துறை, அரசுத்துறை, எல்லாவற்றையும் இவ்வளவு அசிங்கப்படுத்தி வச்சிருக்கிறானே, இனி வாறவனும் இதைத்தானே பின்பற்ற முயற்சிசெய்வான், கிழவன் கருணாநிதி விட்டுவைத்திருக்கும் துறை எதுவுமே கிடையாது, தமிழ்நாட்டில் பிரபாகரனைப்போல ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும், அந்தத்தெரிவுதான் மக்களை மக்களாக வழிநடத்தவும் உதவும், மக்களால் செய்யக்கூடிய காரியமும் அதுதான் அதற்கு முயற்சிசெய்யுங்கள்,

    ReplyDelete
  8. Well done Savukku.

    One thing is clear. If it comes to protect his turf, CM will be okay to drop his lieutenant(Jagat in this case) like a hot potato. Surely, Mr. Sait could very well be wary of CM abandoning him at an opportune moment.

    Me thinks he would have his aces preserved for such an eventuality.

    Thoroughly entertaining this cat & mouse game!

    ReplyDelete
  9. When we open the newspaper we feel ashamed to live as a coward for doing nothing against the atrocities of the Government police etc.,But when we read your blog we console ourselves that there is somebody to raise a voice.Thank you and happy that you are following up the matters.

    ReplyDelete
  10. good savukku. பேச்சோடு நிற்பது சவுக்குக்கு பிடிக்காது. செயலிலும் இறங்க வேண்டும்.
    Otherwise No use..... Get help from Lawyers.Do the needfull plz...

    ReplyDelete
  11. நன்கு அறிமுகமான நீதியரசர் சி.டி.செல்வம் தான் அது. // Vinasa kalay Vibaretha Buthi//

    ReplyDelete
  12. இந்த மாதிரி காலேஜ்ல (பெரும் பணம் கொடுத்து) படிச்சு பின்னர் அரசு மருத்துவராகவோ அல்லது மருத்துவத்துறையில் பணிபுரியும் அதிகாரியாகவோ இருப்பவர் எந்த லட்சணத்தில் இருப்பார்??????

    இத்தகைய கல்லூரிகளே தவறான தலைமுறைகள் உருவாகக் காரணமாக இருக்கின்றன.

    ReplyDelete
  13. சவுக்கிடம் ஒரு கேள்வி,,
    சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர்,

    ReplyDelete
  14. சவுக்குக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. Savukku should contact opposition leader in Parliament. Unless pressure is on central govt they wont act on state govt.Very few people are figting the system and must use every support.Just because it is BJP don't neglect it.
    Vallavan kaiku pullum ayudham

    ReplyDelete
  16. அனுபவதில் பார்த்தால் இந்த மாதிரி ஆசாமிகளை பற்றி எழுதும் போது அனைவரும் படித்து விடுவார்கள் என்று யாரும் கருதாமல் இதனை ஒரு விளம்பரமகதான் சம்பத்தப்பட்டவர்கள் ஜாலி யாக எடுத்து கொள்கிறார்கள் ....

    ReplyDelete
  17. கலக்குதீயளே ! அடுத்த புலனாய்வு எப்போ வரும்-ன்னு எதிர்பார்க்கிறோம் ! !!

    ReplyDelete
  18. savukku and Team Should answere this Question ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த
    கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?
    What is next Step ? What we want to do Next ?

    ReplyDelete
  19. சவுக்கிடம் ஒரு கேள்வி,,
    சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர்,
    savukku and Team Should answere this Question ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த
    கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?
    What is next Step ? What we want to do Next ?

    ReplyDelete
  20. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
    BY Kavignar Thamarai
    Soul stirring Lyrics


    ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்


    செய்துவிட்டாய்


    எங்கள் தமிழினத்திற்கு...

    எத்தனை


    வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்


    காலில் விழுந்தும் கதறியும்


    கொளுத்திக் கொண்டு செத்தும்


    தீர்ந்தாயிற்று...

    எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

    இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

    பட்டினியால் சுருண்டு மடிந்த

    பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து

    அழுது வீங்கிய கண்களோடும்

    அரற்றிய துக்கத்தோடும்


    களைந்த கூந்தலோடும்

    வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

    கண்ணகி மண்ணில் இருந்து

    ஒரு கருஞ்சாபம்!

    குறள் நெறியில் வளர்ந்து

    அறநெறியில் வாழ்ந்தவள்

    அறம் பாடுகிறேன்!

    தாயே என்றழைத்த வாயால்

    பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

    இனி நீ வேறு, நான் வேறு!

    ஏ இந்தியாவே!

    ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

    குண்டுகளைக் குறிபார்த்துத்

    தலையில் போடவைத்த உன்தலை

    சுக்குநூறாய் சிதறட்டும்!

    ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

    எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

    இனி ஒரு நூற்றாண்டுக்கு


    உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

    மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு


    மளமளவென்று கலையட்டும்!

    ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

    இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

    தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

    அறுவடையாகட்டும்!

    மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

    உங்கள் மலைகள் எல்லாம்

    எரிமலைக் குழம்புகளைக்

    கக்கி சாம்பல் மேடாகட்டும்!

    இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

    உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

    உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

    எதிரிகள் சூழ்ந்து


    உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

    தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து

    சிதறிய உடல்களோடு

    சுடுகாடு மேடாகட்டும்!

    போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று

    கூசாமல் பொய் சொன்ன வாய்களில்

    புற்றுவைக்கட்டும்!

    வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

    எங்கள் எலும்புக் கூடுகள் மீது

    ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

    உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

    தூள்தூளாகட்டும்!

    உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......

    பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!


    நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

    உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

    ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

    எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி


    சித்திரவதையில் சாகடித்தீர்களே...

    உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

    எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

    சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...

    உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

    உங்கள் பெண்களெல்லாம்

    படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

    நரமாமிசம் புசித்தவர்களே...

    உங்கள் நாடி நரம்பெல்லாம்


    நசுங்கி வெளிவரட்டும்!

    இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

    புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

    ஆழிப்பேரலை

    பொங்கியெழுந்து


    அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

    நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

    நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

    நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!..........



    பின்குறிப்பு:

    உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

    குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...

    அவர்கள் நீடுழி வாழட்டும்!



    எம் குழந்தைகள் அழுதாலும்

    உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
    http://tamils.tamilpower.com/poems_thamarai.html

    ReplyDelete
  21. Hello,
    (Sorry for not knowing to use tamil font-promise to learn it soon)
    Recently saw an ad in news paper about this movie "Quater cutting" - on top of that just for name sake tamil letter "VAA" was written- how do i know if tax exemption was given to that movie saying it kept tamil name-if its done how shame on this "Thirutu rail family" - need few savuku adis for them!

    ReplyDelete
  22. Dear Savukku, Please post the details of 'How the government was able to keep 'The Hindu, Indian Express, Times of India, Deccan Chronicle, Dinamalar and Dinathanthi', under their fold.
    Also explain about 'Thuglak Cho'. He is an RSS activist. I heard that he is running his magazine onlywith the help of RSS.
    Please write in detail.

    Thanks,
    Savukku vaasagan

    ReplyDelete
  23. Former Minister of ADMK & DMK Regupathy also doing education business in the name of JJ College at Pudukkottai and Karpaga Vinayaga Engineering, Dental and Medical colleges near Chengulput

    ReplyDelete
  24. savukkuvukku valththukkal

    ReplyDelete