Wednesday, August 25, 2010

நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதிஇந்தியாவிலேயே மிகச் சிறந்த சாணக்கியர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் கருணாநிதி. இவரின் சாணக்கியத்தனத்துக்கு முன்னால், எவரும் நிற்க முடியாது. கருணாநிதி கண்ணசைத்தால் ஒரு பொருள், திரும்பினால் ஒரு பொருள் என்று இவரின் அனைத்து அசைவுகளுக்கும் ஒரு பொருள் உண்டு.

அரசியலில் பல்வேறு புயல்களைச் சந்தித்தவர் கருணாநிதி. மிகப் பெரிய இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்தும், இன்னும், திமுகவை ஒரு கோட்டையாக கட்டி ஆண்டு வரும் கருணாநிதியின் திறமைகள் அசாத்தியமானவை.

இத்தனை திறமைகளோடு, இன்று ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பில் இருந்து வரும் கருணாநிதி, நிதானம் தவறி வருகிறாரோ என்ற சந்தேகம், அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருணாநிதிக்கு தமிழக மக்களை விடவும், தனது குடும்பத்தின் மீதுதான் அக்கறை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அதை வெளிப்படையாக கருணாநிதி சொல்லிக் கொள்ள மாட்டார். தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்கிறேன். கோடிக்கணக்கான அன்பு உடன்பிறப்புகளுக்காகத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

ஆனால் முதல் முறையாக, எனது குடும்பத்தினர் தான் முக்கியம். அவர்கள் சினிமாவுக்கு வந்தால் என்ன என்று பேசியிருக்கிறார். அவரின் கோபத்துக்கு காரணம், தினமணி நாளேட்டில் வந்த ஒரு சிறிய கார்ட்டூன்.அந்த கார்ட்டூன் தொடர்பாக கருணாநிதி பேசியது.

“இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - """"கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்"" என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். """"அடடே……!"" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது.
என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?

அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் """"நாம்"" திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் """"பதான்"" என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம்.பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். """"அக்பர்"" அவர் நடித்த படம் தான். நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த """"பதான்"" நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள்.

அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவையிலே உறுப்பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?

கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத்தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை. ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர்களை எப்படி நேசிக்க முடியும்?

கலைத்துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்களிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகையிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத் தான் பையனனூரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்படவுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். “

இந்த உரையில் குறிப்பிடப் படாமல் விடப்பட்டதும், கருணாநிதி பேசியதும் என்னவென்றால், “என் மனைவி என்ன மலடியா ? “ என்பது.

கருணாநிதி போன்ற வயது முதிர்ந்த அரசியல் அனுபவம் மிக்க தலைவரின் வாயில் இருந்து பொது மேடையில் வரக் கூடிய வார்த்தைகள் இது வல்ல. அவரின் முதிர்ச்சிக்கும், அனுபவத்திற்கும், இந்த வார்த்தைகள் பொருத்தமானவை அல்ல.

தினமணியில் வெளி வந்த ஒரு சாதாரண கார்ட்டூனுக்கு, கருணாநிதியின் இந்த எதிர்வினையானது மிக மிக கூடுதலானது. தேவையற்றது.

கருணாநிதியின் இந்த எதிர்வினைக்கு காரணம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் எல்லாம் போட்டு, அவரை கவுரவித்தேனே. அந்த நன்றியை நினைத்துப் பார்க்காமல் என்னைப் பற்றி இப்படி கார்ட்டூன் போட்டிருக்கிறார்களே என்ற ஆதங்கம் மற்றும் கோபம்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கருணாநிதி செம்மொழிக் குழுவில் போட்டது, வைத்தியநாதனுக்கு கவுரவம் அல்ல. கருணாநிதிக்குத் தான் கவுரவம். இது போல செம்மொழிக் குழுவில் போட்டால், தன்னைப் பற்றி எதுவும் எழுத மாட்டார்கள் என்று எண்ணுவது, கருணாநிதியின் நிதானமின்மையையே காட்டுகிறது.

ஒரு கார்ட்டூனுக்கு எதிர்வினையாக, ராஜ்கபூர் பதான் நாடகத்தில் வெற்றிலையை குதப்பி துப்பினார், அதை மக்கள் ரசித்தார்கள் என்று பேசுவதை எதில் சேர்த்துக் கொள்வது ?

திரைப்படத் துறையினருக்கும், தனக்கும் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கருணாநிதி பேசியிருப்பது, அவரது ஆதங்கத்தை காட்டுகிறதே தவிர, யதார்த்தத்தை காட்டவில்லை. ஆட்சி மாறினால், இன்று கருணாநிதிக்கு விழா எடுக்கும் இந்த காகங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கில், பச்சை நிற மேடையில், பச்சை இருக்கைகளால், அரங்கத்தையே பச்சையாக்கி விழா எடுக்கப் போகிறார்களா இல்லையா ?

வெளியில் சொல்ல முடியாமல், திரைப்படத் துறையினரும், தயாரிப்பாளர்களும், பெரும் பொருமலில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியின் மனது நம்ப மறுக்கிறது. பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இருந்து, பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனங்களையெல்லாம், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான, ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், சன் பிக்சர்சும், க்ளவுட் னைன் பிக்சர்சும், ஆக்டோபஸ் போல வளைத்து கபளீகரம் பண்ணுவதை மகிழ்ச்சியாகவா எதிர்கொள்வார்கள் ?

இன்றே திரைப்டத் துறையினர், எத்தனை பேர் அதிமுகவோடு ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கருணாநிதிக்கு தெரியுமா ?

என்னுடைய குடும்பத்தினர் திரைப்படம் தயாரித்தால் விமர்சிக்கிறார்கள் என்று ஆதங்கப் படுகிறாரே கருணாநிதி….. எங்கிருந்து வந்தது, இவரது குடும்பத்தினருக்கு இவ்வளவு பணம் ? அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலா இவ்வளவு பணம் வந்தது ?கருணாநிதியின் அடுத்த சறுக்கல், விஜயகாந்த், தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளத்தை கருப்புப் பணமாக பெறுகிறார் என்று அறிக்கை விட்டது.

கருப்புப் பணம் வைத்திருப்பதும், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்வதும் ஒன்றா ? விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே இவை ?

கருப்புப் பணமாக விஜயகாந்த் வாங்குகிறார் என்கிறாரே கருணாநிதி… தன்னுடைய பேரன்கள் தயாரிக்கும் எந்திரன் படத்தில் கருப்புப் பணமே இல்லை என்று உறுதியாக கூற முடியுமா கருணாநிதியால் ?

ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், க்ளவுட் நைன் பிக்சர்சும் கருப்புப் பணம் இல்லாமலே திரைப்படத்தை எடுத்து முடித்து விடுவார்கள் என்று கருணாநிதியால் கூற முடியுமா ?

இது போல நிதானம் தவறி, தேவையற்ற அறிக்கைகளை கருணாநிதி விடக் கூடியவர் அல்ல. ஆனால், இது போன்ற அறிக்கைகளை கருணாநிதி விட்டிருப்பது, அவர் நிதானம் தவறி வருகிறார் என்பதையே காட்டுகிறது.

மேலும், கருணாநிதி, தற்போது அவரின் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டின் பிடியில் இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

பெரும்பாலான விஷயங்களில் இவர்கள் இருவரும் கூறும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கருணாநிதி முடிவெடுப்பதாக கூறுகிறார்கள்.

தங்களின் வசதிப்படி, கருணாநிதியை முடிவெடுக்க வைத்து, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் பல காரியங்களை இந்த நிழல் முதல்வர்கள் இருவரும் செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கருணாநிதியின் மகன், மகள்களை விட, இந்த நிழல் முதல்வர்களுக்கு, செல்வாக்கு அதிகம் இருப்பதால், இவர்கள் போக்கிலேயே பல அரசு முடிவுகள் எடுக்கப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் பொட்டு சுரேஷ் என்ற நபரோடு விகடன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட உரசல் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி அவர்களோடு உரையாடிய போது, கருணாநிதி இரண்டு வார்த்தைகள் பேசினால், ராஜமாணிக்கம் இருபது வார்த்தைகள் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

பொட்டு விஷயத்தை ஜாபர் சேட் பார்த்து முடித்து விடுவார் என்று தரப்பட்ட உறுதி மொழி மீது இது வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை என்றும், அடுத்த மாதம், விகடன் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மதுரையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்ட வழக்கு, இது வரை வாபஸ் பெறப் படவில்லை என்பதும், இந்த நிழல் முதல்வர்களின் செல்வாக்கினாலேயே என்று கூறப் படுகிறது.தேவையற்ற முறையில் பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி, பக்குவமில்லாத அரசியல்வாதி இல்லையென்றாலும், விகடன் விஷயத்தில் அரசு கடைபிடிக்கும் அணுகு முறை மிக மோசமான விளைவுகளை திமுக அரசுக்கு ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், இந்த நிழல் முதல்வர்கள், கருணாநிதி மீது செல்வாக்கு செலுத்தி, ராஜமாணிக்கம் மற்றும், ஜாபர் சேட் ஆகிய இருவருக்கும், விகடன் குழுமத்தோடு தனிப்பட்ட முறையில் இருக்கும் விரோதத்துக்காக இந்த பிரச்சினையை பயன் படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.

அடுத்த மாதம் மதுரையில் வழக்கு நடக்கும் போது, தமிழகமெங்கும் இருந்து பத்திரிக்கையாளர்கள் மதுரையில் திரள திட்டமிட்டிருக்கும் சூழலில், அரசுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக இருக்கிறது என்றும் கூறப் படுகிறது.

இது தவிர, திமுக தலைவர்கள் வட்டத்தில் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இன்னொரு முணுமுணுப்பு, நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்பூ, துணை முதல்வர் அளவுக்கு, செல்வாக்கோடு இருப்பதாக கூறப் படுகிறது. முதல்வர் இல்லத்திற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் செல்வதற்கும், எப்போது வேண்டுமானாலும் முதல்வரை சந்திப்பதற்கும், குஷ்பூவால் மட்டும் முடிகிறது என்றும், கட்சியின் மூத்த தலைவர்களை விட, குறுகிய காலத்தில் குஷ்பூ செல்வாக்கு பெற்று விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவது கூட, இந்த இருவரின் செல்வாக்காலேயே என்று தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.
சவுக்கு

33 comments:

 1. //இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாணக்கியர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் கருணாநிதி//

  சாணக்யர் மட்டுமல்ல...
  சாணக்ய'சத்ரியர்'

  ReplyDelete
 2. சவுக்காரே!
  உங்கள் விசிரிகளின் விருப்பமாக
  தன்மானத் தலைவலி கவிஞர் அவர்களையும்
  மொழியின் இசையான தகவல் தொழில் நுட்பத்தையும் பற்றி
  கொஞ்சம் தகவல் தாருங்களென்!!.

  ராம்ஸ்

  ReplyDelete
 3. திரைப்படத்துறையினரே செம காண்டுல இருக்கானுங்க. எல்லா தியேட்டரையும் இவனுங்களே புக் பண்றாங்கென்னுட்டு. கூட சிரிச்சுகிட்டு இருக்காங்கன்னு நினைக்கவேண்டாம். எல்லாரும் எப்படா திமுக கவிழும்னு காத்துகிட்டு இருக்காங்க.

  ReplyDelete
 4. 1.//நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதி//
  2,//கருப்புப் பணம் வைத்திருப்பதும், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்வதும் ஒன்றா ? விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே இவை ?//சவுக்கும் மோசமாக நிதானம் தவறியிருக்கிறது,,விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே,என்பது தவறு .ஐந்துமுறை என்பதே சரியானது, அத்துடன் சவுக்கே அடுத்த கருணாநிதியின் வெற்றிக்கும் பாடுபடுவதுபோல் கரிசினையுடன் உதவி நிற்பதுபோலுமல்லவா எண்ணத்தோன்றுகிறது, சாமி சவுக்காரே .உசாராவதற்கான உத்திகளெல்லாவற்றையும் நீரே போட்டுக்குடுப்பதால்,நீரும் பயப்படுத்தப்பட்டிருக்கிறீர் அல்லது ஏதோ விதத்தில் பணிந்துபோகிறீர் என்பது மட்டும் வெளிச்சம் ,முடிந்தால் விளக்கம்தரவும் ,கருணாகண்ணியத்திற்கு பயந்தால் வேணாம்.,

  ReplyDelete
 5. எனது மனைவி மலடாகவே இருக்க வேண்டுமா என்றா ஒரு தலைவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுவார்? நிதானமாக ஆனாலும் சுளீரென்றே சவுக்கை சுழற்றியிருக்கிறீர்கள் :)

  ReplyDelete
 6. //ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,//

  ஆமாங்க! உங்க 'சேவையை' எண்ணி தமிழர்கள் பூரிச்சுப் போய் இருக்கோம் 'எழுச்சித் ' தலைவரே! தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லாம ,மொத்த திராவிட பசங்களுக்கும் உங்க 'பெருமை' தெரியணும்.
  //அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு //

  அதெல்லாம் என்ன நடிப்பு?நீங்க நடிச்சா நாடு தாங்குமா?அட,நீங்க உக்காந்தா பாராட்டுவிழா,நின்னா பொதுக்கூட்டம்,படுத்தா உண்ணாவிரதம்...
  அதையே பார்த்து மக்கள் எல்லாம் பூரிச்சுப் போய் இருக்கோம்.

  ReplyDelete
 7. ""ஜாபர் சேட், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியிடம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
  திருவான்மியூரில் கட்டப் பட்டு வரும் வீடு கட்டுமானப் பணிகள், ஒரு 50 லட்ச ரூபாய் குறைவதால் நின்று இருப்பதாகவும், அதற்காகத் தான் புகழேந்தியிடம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.
  தமிழக மக்கள் உரிமைக் கழகம் வசூல் செய்யத் தொடங்கினால் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் 50 லட்சம் வசூல் ஆகாது.
  அதனால் சவுக்கு வாசகர்கள், கீழ் கண்ட முகவரிக்கு தங்களால் இயன்ற தொகையை மணி ஆர்டராக அனுப்பி, திருவான்மியூர் கட்டுமானப் பணி தொடர உதவுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது"".
  Thiru.Jaffer Sait,IPS
  Inspector General of Police (Intelligence)
  Mylapore, Chennai. 600 004  western union la kuda send panalama

  ReplyDelete
 8. சவுக்கு சாயம் வெளுத்துப் போச்சி டும்.. டும்.. டும்..

  ReplyDelete
 9. //ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,//

  இவர் தமிழனுக்காக மட்டுமே பாடு பட்டால் போதாதா?
  ஏன் இவருக்கு ஓட்டு போடாத மற்றவருக்கெல்லாம் பாடு படுகிறார்.

  இவர் தமிழினத்திற்க்கு மட்டும் தலைவரல்ல ஒட்டுமொத்த கன்னட, தெலுங்கு, மலையாளி ஆகியோருக்கும் தலைவர்.
  இனி ”திராவிட இனத் தலைவர்” என அழைப்போம், அதை தமிழ் நாட்டில் மட்டுமே இருந்து அழைப்போம்.

  ReplyDelete
 10. //ஆட்சி மாறினால், இன்று கருணாநிதிக்கு விழா எடுக்கும் இந்த காகங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கில், பச்சை நிற மேடையில், பச்சை இருக்கைகளால், அரங்கத்தையே பச்சையாக்கி விழா எடுக்கப் போகிறார்களா இல்லையா ?//

  Well Said!

  ReplyDelete
 11. //ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,??? அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,??? அதை ஒழிக்க வேண்டும்,???? அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர???//
  இம்பூட்டுக்காலதிலேயும் இன்னாய்யா தலிவரே டமில் நாடு மேல இன்னா பண்ணிகீச்சுப்புட்டே ,ஊம்பாட்டுக்கி ஊரூ ஊரா கண்ணாலமுன்னு கட்டிக்கினு, நீயேகுடும்பங்களையும் நடத்திக்கீனு பூள்ளியலையும் பெத்துகினு, ஊங்குடும்பத்துக்குத்தானே படுபட்டுக்கினுருகியே, தவிரையும் வேரயென்னத்தெ கண்ணா கீச்சிட்டெ,ஒண்ணு சொல்லுறன் கேட்டுக்க தலிவா, அப்பிடியே கலஜர் டிவி, சன்னு டிவியையும் அவிச்சிடு, இந்தாபாரு விஜய் டிவி தெரியும்லே, அதில்ல போடுறான்பாரு :> இது கதையல்ல நிஜம்,, அப்புரம்::> நடந்தது என்ன,,இதுங்களைப்பரு நாடு எப்பிட்க்கீதுன்னு நல்லாபுரிஞ்க்குவ, இந்தா பேமானி நீ இரூகப்போய்தான் டமில்நாட்டுக்கி பேஜாரா போச்சி, னடையக்கட்டப்பாருய்யா. திராவிடனு டமிலனு அவனுங்கபாத்துப்பாங்க, இன்னா னைனா மண்டைக்கி ஏத்திக்கினியா, மனிஷன் பிச்சைக்கும் வளியத்துப்போயி நாயி ஆட்டம் அலியிறான், நீய் மூதேவி ஒப்பாரி பாடியிட்டிரிக்கியா,

  ReplyDelete
 12. இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?

  கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )//////
  when....??????????

  ReplyDelete
 13. எப்படி...தி.மு.க வின் வளர்ச்சிக்கு முழு காரணமும் திரு.மு.க வோ...
  அதே இந்த தி.மு.க..ஆட்சி ஏற்படுத்திய சேதத்திற்கும் அவர் தான் பொறுப்பு...
  (என்பதையும் அவர் உணரவேண்டும்)
  உப்பை தின்னவன் தண்ணி கொடுத்து தான் ஆகவேண்டும்...
  இவர்களால் இழந்தவர்கள் பட்டியல் வேண்டுமா சவுக்காரே ?
  நீங்கள் சவுக்கு என்றால் நிறைய சாட்டைகள்...
  பாம்பு சட்டை உரிப்போதுபோல்...அம்மாவாசையன்று இருட்டில் உரித்து கொண்டுள்ளது....
  அவர்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுங்கள்...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. கருணாநிதி ஆட்சி முடியும் என்ற கவுண்டன் எங்கே?பெட்டி கிடைத்ததா?
  அதனால்தான் யுவகிருஷ்ணா என்ற கருணாநிதியின் அடிவருடிக்கூட கிண்டல் செய்கின்றான்.

  ReplyDelete
 15. புகழேந்தி மீது தொடர்ந்த வழக்கு நிலைமை என்ன?, நீதி மன்றம் என்னதான் சொல்கிறது?,
  ஜாபர் மாமா மீது சவுக்கு வைத்திருக்கும் ஊழல் அனைத்தயும் சாட்சிகளோடு சவுக்கு நிருபித்தால் அதே 50 லச்சம் ஜாபர் மாமா புகழேந்தி-கு கொடுப்பாரா?

  ReplyDelete
 16. Sorry I posted this comment on a wrong post.

  You have started a count down (your own) for Karunanidhi's Rule. But you ask Karunanidhi to be cautious in his decisions in election year to ensure victory. Two stances are ridiculously contradicted. All your posts are revolve around Jaffer Sait. While your posts convince that Jaffer Sait is a corrupt officer, in taking up tirade of this intensity against him betrays you in hiding your intentions. Most ridiculous of all is that your claim that Karunanidhi has earned prestige by appointing Dinamani Vaidyanathan, in Classical Tamil Conference Committee and Vaithi has not earned honour from his inclusion. His penchant for being in power center and coloumns of his own news paper is well known. Your observation shows that you are imbalanced and inebriated by the showers of praise pouring for your cynical writings. Do you know Vaithi's predecessor Sambandham never took part in this sort of official committees and kept himself off the limelight, as he regarded these as principles of true journalist. I wonder how the bad tastes of the third rated right-wing fascist mathi has earned your appreciation. I am writing this because i love to visit Savukku and admire bold journalism-like character shown by you in bringing out facts that mainstream media fails to do. due to font problem I could not type in Tamil and I regret that. If you correct yourself when it comes to overstepping and lopsided comments your site could become a great contributor to the society and democratising TamilNadu. Best of Luck.

  mmmmm
  I don't want to mention my name.

  ReplyDelete
 17. சவுக்கு ,
  சரியான விளாசல்.

  கருணாநிதிய விட இந்த அல்ல கைகள் இம்ச தாங்க முடியல.
  சில அல்ல கைகள் பின்னூட்டத்த வெளியிடுறதே இல்ல.
  இதுகள் என்று திருந்தும் ?

  ReplyDelete
 18. சவுக்கு சாயம் வெளுத்துப் போச்சு என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அது எப்படி என்று மட்டும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். அடுத்து சவுக்கு துக்ளக் ஆளு.. பார்ப்பான் என்று சொல்வாரோ..

  கருணாநிதியைப் பற்றி இவ்வளவு தெரிந்த பிறகும் இப்படி ஒரு ஜிங்க் சக்..

  ReplyDelete
 19. "தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி."!!??

  என்ன நடக்குது இங்கே ?

  சவுக்கு வேஷம் கலஞ்சு போச்சு என்று 'அதிர்ஷ்ட அனா ' சொல்லும் அளவுக்கு என்ன நடக்கிறது ! உங்கள் வாசகர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுங்கள் !
  கவுன்ட் டவுன் எங்கே ?!! ஏன் கருணாநிதிக்கு ஆதரவான பேச்சு ?
  வைகோ ,திருமா ,விஜயகாந்த், சீமான் என்று எல்லோர் முகமூடியும் கிழிந்து தொங்கி விட்டது! சவுக்கு தான் இருக்கிறதே என்று நினைத்தால் ...முடிவில் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது !
  இதுக்கு 'அதிர் அனா ' போல் 'குஞ் ந ' வாக இருந்து விடலாம் !
  அதிர் அனா குறிப்பிடுவது உங்கள் பார்பன ஆதரவு நிலைப்பாடோ ...அதுவும் சரியோ என்றும் தோன்றுகிறது !?? தெளிவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறோம் !
  -Vazhuthi

  ReplyDelete
 20. எப்பொழுதும் உங்களுடைய பதிவை வாசித்தபிறகு ஒரு மகிழ்ச்சி, தாக்கம், மன நிறைவு இருக்கும்
  ஆனால் ஏனோ இந்த பதிவு அப்படி இல்லை.
  காரணம்
  ராஜா மாணிக்கம் மற்றும் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டை மட்டுமே முக்கிய காரணமாக சொல்கிறீர்கள். கருணாநிதியை கண்டிக்க வில்லை.
  கருணாநிதியும் அவரது குடும்பமும் இதுக்கு முழு முதற் காரணம். அதே நேரத்தில் யாரோ (annoy) கமெண்ட் பகுதியில் மதியை பாசிஸ்ட் ஆகா கட்ட முயற்சிக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மதி வரைந்ததில் என்ன தவறு. உண்மையை தானே வரைந்துள்ளார்.
  நல்ல கருத்து துக்ளக்கில் வந்தாலும் வரவேற்க வேண்டியது தான் (குறிப்பு : நான் பெரியாரிசம் சார்ந்தவன்). கருணாநிதி செய்யும் தவறை மறைக்க பழியை பார்பன ஊடகங்கள் மீது போடுகிறார். தவறை ஒரு ஓரமாக அதுவும் கார்டூனில் (தலயங்கத்தில் அல்ல) வரைந்தவுடன் பார்பன ஊடகம் என குதிக்கிறார். தற்பொழுது இவருக்கு குஜா துக்கும் (முன்பு இவரை எதிர்த்த) தினமலர், ஹிந்து..... போன்றவையெல்லாம் பார்பன ஊடகமில்லையா.
  சவுக்குக்கு சிறிய வேண்டுகோள்
  கருணாநிதி செய்யும் இந்த கருத்து திரிபை தங்கள் தயவு செய்து செய்ய வேண்டாம் (இந்த கருணாநிதி அறிக்கைக்கும் ஜாபர் சேட்டு தான் காரணம் என்று ).

  ReplyDelete
 21. ///சவுக்கு சாயம் வெளுத்துப் போச்சி டும்.. டும்.. டும்.///

  டேய் !!! இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல,
  போயி மருந்த எடுத்துட்டு வா....

  ReplyDelete
 22. intha yuva krishnava nambathinga. avan oru spy

  ReplyDelete
 23. கருணாநிதி ஆட்சி முடியும் என்ற கவுண்டன் எங்கே?
  சிறிய சறுக்கல் சவுக்கிடம், உண்மை நிலைமை என்ன?

  ReplyDelete
 24. சவுக்கு you too ???

  ReplyDelete
 25. திரு லக்கி லுக் அவர்களுக்கு

  சாயம் வெளுத்த விபரம் புரியவில்லை, கண்டிப்பா வம்பளக்க இல்ல,
  அவசியம் சொல்லவும். இங்க இல்லன்னாலும் உங்க தளத்தில் .........
  சவுக்கின் முயற்ச்சிகளை கூர்ந்து கவனித்து வருவதால் தான் இந்த கேள்வி

  அன்பின்
  சூரி

  ReplyDelete
 26. a very good and massive ditch on mr.m.k. face?.well done savukku.but jaffer shaitta neenga vidave maattingalaa?.ore bore adikkuthu.konja naal avar matteruku leave vidungalen.

  ReplyDelete
 27. நல்லதனே போயிகிட்டு இருந்தது ?? இந்த பதிவு வழக்கம் போல சுவாரசியமா இல்லை சவுக்கு அவர்களே. ஒரு வேல லேசா பயம் இருக்கோ என்னவோ? அதுசரி பழ கருப்பையாவ தாகுன மாதிரி எதாவது நடந்துடுமோன்னு .........

  ReplyDelete
 28. Savukku,
  Normally you were being given explanation to all the comments by the readers. But since yesterday you didn't give any explanation. Why? Yesterday I posted my comment in tamil.
  கருணாநிதி ஆட்சி முடியும் என்ற கவுண்டன் எங்கே?
  சிறிய சறுக்கல் சவுக்கிடம், உண்மை நிலைமை என்ன?
  Please understand the readers that we believe and expecting something different from you not the usual. That's why you are getting this much comments from your readers. Need you to be neutral

  ReplyDelete
 29. Where is the count down? It is missing from your website, scared of MK?

  ReplyDelete
 30. இது இந்த பதிவை பற்றியல்ல,ஆனால் சவுக்குக்கு உபயோகமான தகவல்..இதை கமெண்ட்ஸ் ஏரியாவில் பதிப்பிக்க வேண்டாம்.


  போனை ஒட்டுக்கேட்டால் ரூ.1 கோடி அபராதம்  மற்றவர்களின் செல்போன் பேச்சை ஒட்டுக்கேட்டால், ரூ.1 கோடி அபராதமும், ஜெயில் தண்டனையும் விதிக்க, டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

  செல்போன்களில் பேசப்படும் பேச்சுக்களை ஒட்டுக்கேட்க தேவையான வெளிநாட்டு கருவிகளை பயன்படுத்தி சமீபத்தில் அரசியல் தலைவர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் வந்தன.


  இந்நிலையில் செல்போன் ஒட்டு கேட்பதை தடுக்கும் விதத்தில், டெலிகிராப் சட்டத்தில் உரிய சட்ட திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.


  இதன்படி, மற்றவர்களின் செல்போன் பேச்சை ஒட்டு கேட்போருக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். சிறை தண்டனையும் அளிக்கப்படும். இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படும்.


  டெலிபோன் அல்லது செல்போன் ஒட்டு கேட்பது, தனி மனிதரின் சுதந்திரத்துக்கு எதிரானது மட்டும் அல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது. எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் மிகவும் விரைவாக செயல்பட இருக்கிற
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=38414

  ReplyDelete
 31. Hi, For your information WWW.Savukku.net is blocked in Sri Lanka. We can't access is directly.

  ReplyDelete
 32. தயுவ் செய்து உடனே பதிப்பு செய்யுங்கள் .அதேனும் கைது முயரிசி நடந்து விட்டதொ என்று பதட்டம் வருகிறது

  ReplyDelete
 33. We are missing Savukku blogs. Any thing happened?
  Even if you are closing the blog you must inform the viewers.

  It is difficult for single man to fight injusticce. You tried your best.
  Don't fight if it is too difficult but don't ever compromise
  robin

  ReplyDelete