Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம்.




பழ.கருப்பையா….

தமிழகத்தின் மிகச் சிறந்த கட்டுரையாளர். வீரியமான எழுத்துக்குச் சொந்தக் காரர். இவர் கட்டுரைகள் படிப்பவர்களின் ரத்தத்தை சூடேற்றும் தன்மை படைத்தன. இவர் எழுத்தில் சத்திய ஆவேசம் உண்டு. இவரின் கட்டுரைகள் தினமணி நாளேட்டில் வந்து மிகப் பிரபலமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக இலங்கைக்கு எம்பிக்கள் குழு சென்றதில், திருமாவளவன் பங்கேற்று, ராஜபக்ஷேவுடன் சிரித்து, குலாவி வந்தது குறித்து, பழ.கருப்பையா எழுதிய கட்டுரை, திருமாவளவனை நெளியச் செய்தது.

இந்தக் கட்டுரைக்குப் பிறகே, திருமாவளவன் வேறு வழியின்றி, ராஜபக்ஷே சகோதரர்களை கைது செய் என்று ஒப்புக்கு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


இன்று, மாலை பழ.கருப்பையாவின் வீட்டில் திமுக ரவுடிக் கும்பல் புகுந்து, அவர் வீட்டை சேதப்படுத்தி, காரை உடைத்து, பெண்களை தாக்கி, அவருக்கும் காயம் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்ன ? பழ.கருப்பையா அதிமுகவின் இலக்கிய அணித் தலைவராக உள்ளார்.

கடந்த வாரம் ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில், பேட்டியளித்த பழ.கருப்பையா கருணாநிதியை விமர்சித்து பேசினார். முள்வேளி முகாமில் தமிழர்களை அடைத்து வைத்து விட்டு, கோவையில் என்ன கொண்டாட்டம் என்று கேட்டார். முக்கிய தமிழறிஞர்களை அழைக்காமல், சினிமாக் காரர்களை அழைத்து, கூத்தடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பழ.கருப்பையா பேசிய அனைத்துமே துக்ளக் இதழில் கட்டுரையாக வந்தவைதான்.


கருணாநிதி நடத்தும் குடும்ப மாநாட்டிற்கு, உணர்ச்சியற்ற சிவத்தம்பிகள் வருவார்கள், ஆனால் தமிழ்த்தாய் வரமாட்டாள் என்று எழுதினார்.


இந்தக் கட்டுரை திமுக உடன்பிறப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, திமுக உடன் பிறப்புகள், கோவை மாநாட்டிலிருந்து பிரத்யேகமாக சென்னைக்கு அனுப்பப் பட்டு, செம்மொழி மாநாடு முடிவதற்குள் பழ.கருப்பையா மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற திமுக மேலிட உத்தரவின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த வன்முறைக் கலாச்சாரம் திமுகவுக்கும் புதிதில்லை, அதிமுகவுக்கும் புதிதில்லை.
1991 முதல் 1996 வரை நடைபெற்ற செல்வி.ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தின் போது, சுப்ரமணியன் சுவாமி மீதும், வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம், தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ஆகியோர் மீது நடத்தப் பட்ட தாக்குதலை மறக்க முடியாது.

அப்போது, பரவலாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி, ஆட்சியை விமர்சித்தால், வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பது. இந்த தாக்குதல்களை முன்னின்று நடத்தியவர்கள், அப்போது அதிமுகவில் இருந்த எஸ்டி.சோமசுந்தரம் மற்றும், இப்போதும் அதிமுகவில் இருக்கும் மதுசூதனன் ஆகியோர்.


ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உண்டு. Paying back with their own coin என்று. அது போல, அதிமுக நடத்திய வன்முறை வெறியாட்டம், இப்போது அவர்கள் பக்கம் திரும்புகிறது. அதிமுக திமுகவிலிருந்து வந்ததுதானே….. ?


வன்முறை திமுகவிற்கு புதிதா என்ன ? ஒரே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அழகிரி கருணாநிதியின் வாரிசாக வேண்டும் என்று ஒரு சதவிகித மக்கள் மட்டுமே விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணதிற்காக, அந்த தினகரன் நாளிதழை நடத்தும், மாறன் சகோதரர்களை அடிக்காமல், அந்நாளிதழின் அப்பாவி ஊழியர்கள் மூவரை எரித்துக் கொன்றவர்கள் திமுகவினர்தானே ?


கட்சியில் மூத்தவராக இருப்பதால், தன்னை மதிக்க மாட்டேன்கிறார், கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக மாவட்டச் செயலரை வெட்டிக் கொன்று விட்டு, இவர்களே சென்று மலர்வளையமும் வைத்தது இதே திமுகவினர் தானே ?


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கருணாநிதிக்கு எதிராகவும் பேசிவிட்டார் என்பதற்காக, இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் புகுந்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை சூறையாடியது, இதே திமுகவினர் தானே ?


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது, கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும் போது, அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டிய நான்கு வழக்கறிஞர்களை திமுக ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதையும், அதை படமெடுத்த ஊடகவியலாளர்களை திமுக ரவுடிகள் கடுமையாக தாக்கியதையும், தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதே ? தாக்கிய ரவுடிகளை கைது செய்வதை விட்டு விட்டு, தாக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீதே வழக்கு போட்டு, கைது செய்யும்,

கருணாநிதியின் காட்டாட்சியில், பழ.கருப்பையாவை உயிரோடு விட்டு வைத்தார்களே என்று சந்தோஷப் படுகிறது, சவுக்கு. ஏனென்றால், இது காட்டுமிராண்டிகளின் காலம் அல்லவோ ?


இன்று பழ.கருப்பையாவை கொலை செய்திருந்தால் நம்மால் என்ன செய்திருக்க முடியும் ? இரண்டு நாள் துக்கம் கடைபிடிப்போம். கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டுவோம்.

செல்வி.ஜெயலலிதா கண்டித்து அறிக்கை விடுவார். உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று யாராவது பொது நல வழக்கு தொடர்வார்கள்.

ஒரு வாரம் கழித்து, அவரவர் அவரவர் வேலையை பார்க்க போய் விடுவோம்.
தேர்தல் வரும் நேரத்தில் இது எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டு, கவரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று வாங்கி எண்ணிப் பார்த்து விட்டு, மீண்டும் கருணாநிதியை முதலமைச்சர் ஆக்குவோம்.

அதற்காக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், கருணாநிதியின் ஜால்ராக் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, சொம்படிக்கலாமா ? இதைத் தவிர வேறு வழியேயில்லையா ? உயிர் வாழவே முடியாதா ?

வரலாறு நெடுக, அதிகாரத்தை எதிர்த்த கலகக் குரல்கள் ஒலித்தே வந்திருக்கின்றன.
அறிவியலின் தந்தை என்று அழைக்கப் படும், கலிலியோ 1500களில் நேரடியாக பைபிளுக்கும், சர்ச்சுக்கும் எதிராக கலகக் குரல் கொடுக்கவில்லையா ?




விஷத்தை அருந்திவிட்டு இறந்தாலும் இறப்பேன், ஆனால், வளைந்து கொடுக்க மாட்டேன் என்று சாக்ரட்டீஸ் உறுதியாக இல்லையா ?




கிறித்தவ மதத்தின் எதிர்ப்பையும் மீறி, சூரியனைச் சுற்றியே இவ்வுலகம் சுழல்கிறது என்று குரல் கொடுக்கவில்லையா கோப்பர்நிக்கஸ் ?





உலகை படைத்தவர் ஏசுகிறிஸ்து என்று பைபிள் கூவிக் கொண்டிருந்தாலும், உயிரிவளர்ச்சியைப் பற்றி நூல் எழுதவில்லையா சார்லஸ் டார்வின் ?



ஆகையால், ஆயிரம் கருணாநிதிகளும், ஆயிரம் அழகிரிகளும் வந்தாலும், நியாயத்தைப் பேசும் கலகக் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இல்லாத கடவுள் இறங்கி வந்தாலும், நியாயத்தைப் பேசுபவனின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.


இந்தக் கருணாநிதிக்கும், அவரின் ரவுடிக் கூட்டத்திற்காகவும் தானே பாடி வைத்திருக்கிறான் பாரதி….



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


சவுக்கு

8 comments:

  1. //அவர் வீட்டை சேதப்படுத்தி, காரை உடைத்து, பெண்களை தாக்கி, அவருக்கும் காயம் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது//


    என்ன அநியாயம் இது ? .... :(
    என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் ...

    ReplyDelete
  2. அவரது கட்டுரைகள் சொரணை அற்றவர்களையும் கோபம் கொள்ள வைக்க கூடிய ஆணித்தரமான கருத்துகளை உடையது..நன்றி

    ReplyDelete
  3. kollaikootta kumbalidam niyayathai edhirparkka mudiyuma savukku sir......thotta.

    ReplyDelete
  4. பழ.கருப்பையா ஒன்றும் நடுநிலை விமர்சகர் அல்ல.அவர் அதிமுகவின் விசுவாசி,நிர்வாகிகளில் ஒருவர்.ஒரு நடுநிலை விமர்சகர் தாக்கபட்டால் அவருக்காக சவுக்கு வருதபடலாம்.அடுத்து ஜெயா ஆட்சியில் அடிபட்டதற்கு சேர்த்து எதாவது பதவி வாங்கி விட்டு போகிறார்.இதற்காக சவுக்கு ரொம்ப கவலைப்படுவது தேவையற்றது.

    ReplyDelete
  5. ஒத்தூவுது ம‌ட்டுமே, க‌லைஞ‌ருக்கு இனிமையாய்,
    ஜால்ரா ச்த்த‌ங்க‌ள் ர‌ம்மிய‌மாய்,
    எதிர்ப்பாட்டு காதுக‌ளில், நர‌ச‌மாய்.
    தாக்கு, அடி, அழி.
    அய்ய‌ன் சொல்லிய‌ 'இடிப்பாரையில்லா ஏமரா ம‌ன்ன‌ன்'
    800 ஆண்டுக‌ள் வாழ்க‌........

    ReplyDelete
  6. பழ.கருப்பையா ஒன்றும் நடுநிலை விமர்சகர் அல்ல.அவர் அதிமுகவின் விசுவாசி,நிர்வாகிகளில் ஒருவர்.ஒரு நடுநிலை விமர்சகர் தாக்கபட்டால் அவருக்காக சவுக்கு வருதபடலாம்.அடுத்து ஜெயா ஆட்சியில் அடிபட்டதற்கு சேர்த்து எதாவது பதவி வாங்கி விட்டு போகிறார்.இதற்காக சவுக்கு ரொம்ப கவலைப்படுவது தேவையற்றது. ................எனினும் எனது கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்...இனியவன்

    ReplyDelete
  7. கருப்பையாவை பத்தி முழுசா கொன்சம் சொல்லுங்களேன்! இவ்வளவு பேசும் ஒரு ஆள், ஒன்று திருடனாய் இருப்பான் (அ) முன்னாள் திருடனாய் இருப்பான்
    -முரசொலி

    ReplyDelete
  8. The way you have supported Pazha Karuppiah shows that you are not a rationalist journalist. It also shows your inneer soft corner towards AIADMK and Jeya which is hidden in youir subconcious mind. You have some issue with Jafar Sait (may be as he is a muslim), after all you are a Hindu. You may have some issues with Saidai Duraisamy (may be you might have been affected personally by him). That is why you spit venom on individuals. There are lot of Jaalras for you also. You are not a saint or Genius to talk and write about others. We just read your article and laugh and still continue with our ideological decisions based on our thinking process and decide which way to vote in the upcoming parliament elections.

    ReplyDelete