ஒரு இணையதளம்நடத்துவதும், அதற்காகபெரும் பிரச்சினைகளைசந்திப்பதும், வீட்டில்இருக்க முடியாமல்தலைமறைவு வாழ்க்கைவாழ்வதும், அதைநடத்துபவருக்கு இயல்பாகஇருக்கலாம். ஆனால், அவருக்கு உதவிசெய்ய ஒருசர்வரை நடத்துபவருக்கு இது இயல்புஅல்ல. எவனோ ஒருவன், சமுதாயத்துக்காக ஏதோசெய்து கொண்டிருக்கிறான், அவனுக்கு நம்மால்ஆன உதவியைசெய்வோம் என்றுஒரு உதவியைசெய்கிறார். அந்த உதவிக்காககைது. 45 நாள்சிறைவாசம். இதை அவரால்எப்படி எதிர்கொள்ளமுடியும் ?
சாதாரண நடுத்தரகுடும்பம். மென்பொறியாளர் வேலை. மனைவி, சகோதரர்கள், என்று நெருக்கமானகுடும்பம். இதுதான்அவரது இயல்பானவாழ்க்கை. திடீரென்றுஒரு நாள், சென்னைக்கு விசாரணைக்குவாருங்கள் என்றுஅழைத்து, அப்படியேகைது செய்து, அவரின் ஒரேதொழில் முதலீடானவிலை உயர்ந்தமேக் சிஸ்டத்தைபறிமுதல் செய்து, 45 நாட்கள் சிறையில்வைத்திருப்பது என்பதைஅவ்வளவு எளிதாகயாராலும் சகித்துக்கொள்ளவோ, ஜீரணித்துக்கொள்ளவோ முடியாது. ஆனால், நண்பர்போத்தி காளிமுத்து, இன்முகத்தோடு அதைஏற்றுக் கொண்டுள்ளார்.
முதல் முறைகைது செய்தி கேள்விப்பட்டதும், அய்யோ, அவர்வீட்டுக்கு என்னபதில் சொல்லப்போகிறோம் என்ற பதை பதைப்பேஏற்பட்டது. ஆனால், அவர்உறவினர்கள், இந்தசிரமத்தை இன்முகத்தோடுஏற்றுக் கொண்டு, 45 நாட்கள் தாமதத்தைபார்க்காமல், ஒத்துழைத்தனர்.
45 நாட்களுக்கு முன்னால், இயல்பாக போத்திகாளிமுத்து விருதுநகர், ராஜபாளையத்தில் தன்வீட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். காவல்துறை ஆய்வாளர்கள்வந்து அழைக்கின்றனர். சென்னை வரும்வரை, காளிமுத்துவுக்கு எதற்காகதன்னை அழைத்தவருகிறார்கள் என்பதேபுரியவில்லை.
சென்னை வந்ததும், ஒரு நபர்போத்தியோடு பேசுகிறார். நீதான் சவுக்குநடத்துகிறாயா என்று. போத்தி அங்குசெல்வதற்கு முன்னதாகவே, போத்தி சவுக்குநடத்துவதாக சந்தேகப்படும் நபரோடு ஃபேஸ்புக் இன்பாக்ஸில்நடத்திய உரையாடல்களைஅச்சிட்டு வைத்துள்ளனர்.
போத்தி காளிமுத்து |
காலை முதல்இரவு வரைவிசாரணை தொடர்கிறது. இந்த விசாரணையின்முடிவில், மாலையில், போத்தி சவுக்குநடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரோடு, முகநூலில்சேட் செய்யவைக்க பணிக்கப்படுகிறார்.
அந்த உரையாடலின்போது, போத்தி, தான் ராணுவமற்றும் அணுசக்தி ரகசியங்களைதிருடித் தருவதாகவும், சவுக்கு நடத்தும்நபருக்கு அதுவேண்டுமா என்றும்கேட்கிறார். பின்னர்ஜெயலலிதா டாட்காம் என்றுஇணையதளம் திறந்து, ஜெயலலிதா மீதுகடுமையான தாக்குதல்தொடுக்கலாம் என்கிறார். ஜெயலலிதாவின் ஊழல்களைஅம்பலப்படுத்துவதுதான் தாக்குதல், அவர் பெயரில்இணையதளம் திறப்பதுஅல்ல என்றதும், மீண்டும் நாம்கருணாநிதி டாட்காம் திறக்கலாம்என்கிறார் போத்தி. போத்தியின் எதிர்புறம்உரையாடுபவருக்கு, போத்திஅந்த நேரத்தில்காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதுநன்றாகத் தெரியும். தெரிந்தே கவனமாகபதில் அளித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில்எதிர்புறம் உரையாடும்நபர், எரிச்சலாகி, சென்னை காவல்துறைஆணையர் அலுவலகத்தில்இருக்கும் ஒருமுக்கிய அதிகாரியைகெட்ட வார்த்தையில்திட்டுகிறார்.
அப்போதும் போத்தியை டார்ச்சர் செய்துகொண்டிருந்தவர் தொடர்ந்துபோத்தியை உரையாடவைக்கிறார். பிறகு, மீண்டும்மற்றொரு அதிகாரியைகெட்ட வார்த்தையில்திட்டிய பிறகுதான்அடங்கினார்கள். அதன் பிறகுதான்அவர்களுக்கு உறைத்திருக்கிறது தாங்கள் தவறான இடத்தில் தவறான வழிகளில் மோதுகிறோமென்று.
இதன் நடுவேவிசாரணயின்போது, சவுக்கு தளம் நடத்துவதாகக் கூறி போத்தி நடத்தி வந்த சர்வர் தொழிலையும் முடக்குகின்றனர். சர்வரின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்படுகின்றன. இது போக, போத்தியின் நண்பரின் மின்னஞ்சல் பாஸ்வேர்டை வாங்கி, அதன் ரெக்கவரி பாஸ்வேர்ட், ரெக்கவரி ஈமெயில் உள்ளிட்டவையும் மாற்றப்படுகின்றன.
சரி இத்தனையயும் செய்வது யார் ? அமர் பிரசாத் ரெட்டி. ஆந்திராவில் பிறந்து, சந்திரபாபு நாயுடுவின் அடிமையாக வளர்ந்த நபர்தான் இவர் சென்னை அருகே உள்ள ஆர்எம்கே தனசேகரன் பொறியியல் கல்லூரியில் பி.ஈ முடித்து விட்டு, National Cyber Safety and Security Standards எனும் நிறுவனத்தை உருவாக்குகிறார். இந்தப் பெயரைக் கேட்கும் அத்தனை பேரும் இது மத்திய அரசின் ஒரு துறை அல்லது, ஒரு அங்கம் என்றுதான் யோசிப்பீர்கள்.
அமர் பிரசாத் ரெட்டி |
பல பேருக்கு உண்மைகள் தெரியாது. மத்திய அரசு அல்லது, மாநில அரசின் இணைய தளங்கள் அத்தனையும் gov.in அல்லது nic.in என்று முடியும் வகையில் மட்டுமே அமைந்திருக்கும். இதை நீங்களோ, நானோ பதிவு செய்ய முடியாது. அரசு அமைப்புக்கள் மற்றும் அரசு துறைகள் மட்டுமே இத்தகைய பெயருடைய இணைய தளங்களை பதிவு செய்ய முடியும். இவ்வாறு முடியும் இணைய தளங்களைத் தவிர்த்த அத்தனை தளங்களும், தனியார் இணைய தளங்களே.
ஆனால் National Cyber Safety and Standards முழுக்க முழுக்க தனியார் நடத்தும் அமைப்பு. ஆனால், இது ஒரு அரசுத் துறை போல தோற்றம் அளிக்க, மிகவும் மெனக்கிடுகிறார் ரெட்டியார். இந்த அமைப்பின் இணைய தளத்தில் சென்று பார்த்தீர்களேயானால், NATIONAL CYBER என்ற வார்த்தை மட்டும், தலைப்பெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். சரி. தேசிய அமைப்பின் தலைமை அலுவலகம் எங்கே இருக்க வேண்டும் ? டெல்லியிலா இல்லையா ? ஆனால், இந்த அமைப்பின் அலுவலகம் எங்கே இருக்கிறது தெரியுமா ?
National Cyber Safety and Security Standards
(An autonomous body)
Cyber House – Southern Region,
No: 1, 1st Floor, 1st Avenue,
8th Cross Street, Indira Nagar Main Road,
Adyar, Chennai – 600 020.
Phone No: 044 – 2440 1766.
Email Id : support@nationalcybersafety.com
ஒரு தேசிய அமைப்பின் அலுவலகம் சென்னை அடையாறிலா செயல்படும் ? மேலும் அவர்களின் இணைய முகவரி. www.nationalcybersafety.com என்ற இணையதள முகவரிக்கு சென்றீர்கள் என்றால், அது, மீண்டும் http://ncdrc.res.in/ என்ற முகவரிக்கே மீண்டும் ரீடைரெக்ட் செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு ஜெகஜ்ஜால வித்தை நம்பகத்தன்மை ஏற்படுத்த.
மேலும், இந்த இணையதளத்துக்கு சென்று பார்த்தீர்கள் என்றால், முகப்பிலேயே, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்திகள் வரும். நரேந்திர மோடி பிரதமரான ஒரு வாரத்துக்குள் இந்த வாழ்த்து செய்தி, இந்த இணையதளத்தில் வந்தது. பிரதமரான ஒரே வாரத்தில் நரேந்திர மோடி எப்படி இந்த அமைப்புக்கு வாழ்த்து செய்தி வழங்குவார் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்.
வழக்கமாக, பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினால், அவர்கள் அலுவலகங்கள் சம்பிரதாயமான வாழ்த்துச் செய்திகளை வழங்குவது வழக்கம். இது போன்ற சம்பிரதாயமான வாழ்த்துச் செய்திகளை வைத்துக் கொண்டு, இணைய தளத்தில் பிரசுரித்து, பீற்றிக்கொள்கிறார், தான் ஏதோ முக்கிய புள்ளி என்ற பிரமையினையும் ஏற்படுத்த முயல்கிறார் ரெட்டி.
ஆனால் http://www.ncdrc.res.in/ என்ற இணையதளம், அமர் பிரசாத் ரெட்டியின் பெயரில், சைபர் ஹவுஸ், சதர்ன் ரீஜியன், 62/3, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசிய அமைப்பின் இணையதளம், எதற்காக அரும்பாக்கம் முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும் ?
ஆனால் http://www.ncdrc.res.in/ என்ற இணையதளம், அமர் பிரசாத் ரெட்டியின் பெயரில், சைபர் ஹவுஸ், சதர்ன் ரீஜியன், 62/3, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசிய அமைப்பின் இணையதளம், எதற்காக அரும்பாக்கம் முகவரியில் பதிவு செய்யப்பட வேண்டும் ?
மேலும், இந்த அமைப்பின் முகவரியில் அட்டானமாஸ் பாடி, சுயாட்சி படைத்த அமைப்பு என்று போட்டுள்ளார்கள். அதாவது அரசு அமைப்பு ஆனாலும் சுதந்திரமாக செயல்படுகிறது என நம்பவைக்க இந்த பில்டப் எல்லாம்.
இதன் தலைவராக இருப்பவர், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன். நீதிபதியாக இருந்தபோதும் பின்னரும் அவரது செயல்பாடுகளெல்லாம் பல்வேறு வகையான கண்டனங்களுக்கும் ஏளனங்களுக்கும் உள்ளானவை.
நீதிபதி மோகன் |
இந்த அமைப்பின் ஆலோசகராக இருக்கும் மற்றொரு முக்கிய புள்ளி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி. இவர் இன்னுமொரு அற்புத மனிதர்.
நீதிபதி ஜோதி மணி |
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை ஜோதிமணி விசாரித்தார். அந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரர், மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம். அந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த அமைச்சகத்திடம், தனக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பதவி வேண்டுமென்று விண்ணபித்தவர். பின்னர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு தீர்ப்பாய பதவியினையும் கூசாமல் ஏற்றுக்கொண்டவர். இவர்தான், ரெட்டியார் நடத்தும் National Cyber Safety and Security Standards அமைப்பின் ஆலோசகர். ஆக அமர்பிரசாத் ரெட்டி, மோகன் மற்றும் ஜோதிமணி கூட்டணியில் இயங்கும் அவ்வமைப்பிடம் இன்னொரு அதி யோக்கிய சிகாமணி, நம் நீதியரசர், பெருந்தகை சி.டி.செல்வம் சவுக்கு தளத்தை ஒடுக்கும் பணியினை ஒப்படைக்கிறார்.
சென்னை மாநகர காவல்துறையின், இணைய குற்றப் பிரிவிற்கு மீண்டும் மீண்டும் சவுக்கு தளத்தை முடக்குமாறு சி.டி.செல்வம் உத்தரவிட்டும், அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. முடியவில்லை என்றால், ஒரு இணைய தளத்தை முடக்க, இரண்டு காரணங்கள் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும். தீவிரவாதச் செயலில் ஈடுபடும் இணையதளங்கள். குழந்தைகளை வைத்து ஆபாசப்படங்கள் வெளியிடும் இணையதளங்கள். இவற்றை மட்டுமே சட்டப்படி முடக்க முடியும். இந்த இணையதளங்களின் சர்வர்களுக்கு கோரிக்கை வைப்பதாக இருந்தாலும், இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
சென்னை மாநகர காவல்துறையின், இணைய குற்றப் பிரிவிற்கு மீண்டும் மீண்டும் சவுக்கு தளத்தை முடக்குமாறு சி.டி.செல்வம் உத்தரவிட்டும், அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. முடியவில்லை என்றால், ஒரு இணைய தளத்தை முடக்க, இரண்டு காரணங்கள் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும். தீவிரவாதச் செயலில் ஈடுபடும் இணையதளங்கள். குழந்தைகளை வைத்து ஆபாசப்படங்கள் வெளியிடும் இணையதளங்கள். இவற்றை மட்டுமே சட்டப்படி முடக்க முடியும். இந்த இணையதளங்களின் சர்வர்களுக்கு கோரிக்கை வைப்பதாக இருந்தாலும், இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
சி.டி.செல்வம் |
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், நீதியரசருக்கு சட்டத்தையும் யதார்த்தங்களையும் விளக்க இயலாமல் பரிதவிக்கிறது இணையகுற்றப் பிரிவு, இந்நிலையிலேயே சி.டி.செல்வம், National Cyber Safety and Standards கதைக்குள் வருகிறது.
சாதாரண பொறியியல் பட்டதாரியான அமர் பிரசாத் ரெட்டி, தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட பதவியின் பெயர் என்ன தெரியுமா ? ADDITIONAL DIRECTOR GENERAL.
கணினிமேதை ரெட்டியாரின் இன்னொரு சிறப்புமிகு தோற்றம் |
மின்னஞ்சலை ஹேக் செய்த குற்றத்துக்காக ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய புலனாய்வுத் துறைக்கு புகார் அனுப்பிய மறு தினம், யாரோ ஒருவர் அழைத்து, எங்க சார் உங்க கிட்ட பேசணும் என்று சொல்கிறார் என்றார் ஒருவர். யாருய்யா உங்க சார் என்றதும், ரெட்டிகாருவே நான் அமர் பேசறேன். என்ன என்னைப் பத்தி பேஸ்புக்கில் எழுதியிருக்கீங்க.... என்றார். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது தெரியும். சிபிஐயிடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் விசாரிப்பார்கள் என்றதும், நான் எதுவுமே செய்யவில்லை என்றார். அதை சிபிஐ விசாரித்து சொல்லுவார்கள் என்றதும், எப்படி என்னுடைய புகைப்படங்களை என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினீர்கள் என்றார். இதற்கு சைபர் கிரைமில் புகார் அளித்து என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்றதும், இணைப்பை துண்டித்துவிட்டார். அவர் புகார் செய்தாரா, வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதா, முதலில் இப்படி ஹாக் செய்யும் உரிமை அவருக்கிருக்கிறதா, எல்லாம் விரைவில் தெரியவரும்.
ஒரு தனியார் அமைப்பையும், அதை நடத்தும் ஒரு தனியார் நபரையும், ஒரு காவல்துறையின் புலனாய்வில் அமர வைத்து, கைது செய்யப்பட்டவரை விசாரிக்க அனுமதித்த, இணைய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜார் ரோஸ் அவர்களுக்கும் இந்த நேரத்தில் எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். காவல்துறையின் பணி என்பது, Sovereign Function. அதை அரசு அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியும். எருமைக் கிடா போன்ற ஒரு தனி நபரை, சைபர் கிரைம் அலுவலகத்துக்குள் நுழைய விட்டதே மிகப்பெரிய குற்றம். அதோடு நில்லாமல், இன்னொருவர் மின்னஞ்சலை சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்தே திருட அனுமதித்ததும், ஒரு இணைய தளத்தின் சர்வரை திருட்டுத்தனமாக முடக்க அனுமதித்ததும் மன்னிக்க முடியாத குற்றங்கள். தண்டனைக்குரிய குற்றங்கள். இருப்பினும், போத்தி காளிமுத்துவை கண்ணியமாக நடத்திய ஒரே காரணத்துக்காக, சைபர் கிரைம் அதிகாரிகளின் இந்த தவறை, மன்னிக்கலாம்.
இன்று போத்தி காளிமுத்து சிறையிலிருந்து வெளியே வந்து விட்டார். போராட்டத்தோடு, கடினமான சிரமங்களுக்கு இடையே, இணைய தளத்தை நடத்துவன் கதாநாயகன் அல்ல. அப்படி நடத்துபவனுக்கு உதவுவதற்காக, 15 நாட்கள் சிறை சென்ற தோழர் முருகைய்யனும், 45 நாட்கள் சிறை சென்ற போத்தி காளிமுத்துவுமே கதாநாயகர்கள்.
அவர்களை கொண்டாடும் இந்த நேரத்தில், போத்தி காளிமுத்து சிறையிலிருந்து வெளி வர பெரும் உதவிகளை புரிந்த, வழக்கறிஞர்கள் மணிகண்டன் மற்றும் சண்முகம் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். போத்தி காளிமுத்துவை, கைது செய்யும்போது மட்டுமல்லாமல், பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும்போதும், கண்ணியமாக நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.
வழக்கறிஞர் மணிகண்டன் |
வழக்கறிஞர் சண்முகம் |
போத்தியின் கைதை ஒட்டி, முகநூலிலும், தொலைபேசியிலும், ஆதரவை நல்கிய, நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது அன்பு நன்றிகள்.
போத்தி காளிமுத்துவை சிறையில் நன்றாக நடத்த உதவி புரிந்த அதிகாரிகள் தங்கள் பெயர்களை குறிப்பிட விரும்பமாட்டார்கள். இருப்பினும், அவர்களுக்கும் சவுக்கின் நன்றிகள்.
அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்த இஸ்லாமிய தோழர்கள், போத்திக்கு சிறையில் பெரும் உதவிகளை புரிந்துள்ளார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள். இந்த உதவிகளை போத்தி பெருவதற்கு, ஒரே காரணமாக இருந்த, வழக்கறிஞர் மற்றும் தோழர் இனியவன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். சவுக்குக்கு ஒரு நாளும் மரணம் கிடையாது. ஆயிரம் செல்வங்கள் வரட்டும். சவுக்கு தொடர்ந்து இயங்கும்.
I have asked you about Pothi Kalimuthu case to your previous Jaggi post. Thank you for an update Savukku. However, i just can't digest, on what basis Pothi got arrested and without bail for 45 days?. I can't image spending single day in confinement. Can you write about what is the case against Pothi, and why it took him 45 days?. Providing server support is his job (freelancer), like Google, Wordpress and other big companies providing the same support. How can he be arrested for the article posted in the site? If you have brought server support directly from Wordpress, where is this case then? Is our Indian Law that lame or the police officials misused it? Will Pothi take action against it and ask for public apology and remuneration for his loss and suffering?. I hope you write about this Savukku and want yout site back online! Never settle!
ReplyDeleteA great scam has happened in anna university during 2006. Many people has got fake M.E. Certificates by giving money to university people. One culprit is C.R.Blalmurugan (now changed his name to C.R.Rene robin to escape) who worked in ramanujam computing center, anna university from 2000-2006, and also got fake M.E certificate which says he has completed M.E. CSE in full time in between the same time duration 2004-2006.
ReplyDeleteHis degree and experience certificate now contradicts saying that "He was a full time student in anna university while he was also full time employee in anna university!!!"
With the fake M.E. certificate he has then completed P.hd from the same university and is now working as a H.O.D. in computer dept, Jerusalem engineering college, pallikkaranai belonging to former DMK M.P. Jagathratchagan.
Also, he is basically a B.Sc physics and MCA (second class) holder, which are not the qualifications to do M.E and also not the qualifications to work in an engineering department.
This stupid is also the son-in-law of aynavaram bethel matriculation school owner Durairaj.
I wish that you be the person to bring out this great scam in which the vice chancellor at that time, department head, department dean, certificate issuing dept and many more are involved by getting lakhs and lakhs of cash.
நன்றிகள் சவுக்கு டீமிற்கு..
ReplyDeleteதொடரட்டும் சவுக்கின் சவுக்கடி..
Telunga they paiya..Reddy unaku iruku diii..
ReplyDeleteசாகயம் IAS மீண்டும் மாற்றம்..
ReplyDeleteஅதைப்பற்றி ஏதும் செய்தி உண்டா..?
சவுக்குக்கு ஒரு நாளும் மரணம் கிடையாது.
ReplyDeleteஎருமைகிடாக்களுக்கும்,எச்சசோறுகளுக்கும் இந்த அருமையான கட்டுரை சமர்ப்பணம்
ReplyDeleteதுனிவே உன் மறு பெயர் சவுக்கு
ReplyDelete//அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்த இஸ்லாமிய தோழர்கள், //
ReplyDeletekolaikaraan unakku tholargala??? nalla vilanguveengada!!!!!!!!
Hats off Savukku and team, Lawyers, police department. Keep it up. I am ready to provide technical support for Savukku.
ReplyDeleteHi Everyone.. Please go to this facebook book page - https://www.facebook.com/NationalCyberSafety?fref=ts
ReplyDeleteand report scam to facebook authority.. Let us put a full stop to this fucking asshole..
Great savukku. Salute to Mr.Pothy.
ReplyDeletePls continue your good work... Though i might not agree with all your views, you take a Neutral stand point in 90% of the issues (in sync with my though)... Great Work...
ReplyDeleteமீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். சவுக்குக்கு ஒரு நாளும் மரணம் கிடையாது. ஆயிரம் செல்வங்கள் வரட்டும். சவுக்கு தொடர்ந்து இயங்கும்.
ReplyDelete
ReplyDeleteGreat job. Mr. Pothy Kalimuthu should ask for compensation from the State and those responsible. Savukku readers should come forward to pursue the case.
அந்த அரும்பாக்கம் முகவரியில் இருந்த. 10x10 ஆபீஸை மூடி 3 மாதத்துக்கு மேல் ஆச்சு. இன்னும் வெப்சைட்ல மட்டும் இருக்கு.
ReplyDeleteHats off to you all.
ReplyDeleteKaali.Krishna
போடுறது உருத்திராட்ச கொட்டை ஆனா செய்யுறது எல்லாம் மொள்ளமாறித்தனம்.
ReplyDeleteGreat Work no one stop you
ReplyDeleteWhat is the need to sought support of Jihadis in Jail and shamelessly acknowledge it in the article?
ReplyDelete"அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்த இஸ்லாமிய தோழர்கள், போத்திக்கு சிறையில் பெரும் உதவிகளை புரிந்துள்ளார்கள். அவர்களுக்கும் என் நன்றிகள்."
ReplyDeleteLOL. You know what they say about birds of the same feather. :)
Dear Savukku,
ReplyDeleteI was tried in different ways to follow your website. Finally today found it. Our support to all your team. Please start a website in a foreign country which give respect to the human rights and do all the uploads.
One more thing. As people complaint here, I have also complaint here.
In Chennai palkalikalakam, a few faculties utlizing the research students as their......... many students affected already. Even today if you vist those depts you will find the faculties doors are closed and discussing the research inside the room. This is happening in kovai univ also which has a poet name. Also, lab technicians were recently become faculties based on high court order but UGC rules are against them. So both universities Anna and Madras are corrupted by administration. But the main issue is girl students became the scapegoats for the faculties sexual desire.
Kindly make a report and definitely it will show the real face of both universities and faculties worst behavior in the century.