Saturday, October 17, 2009

ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (!!!!????)


ராஜீவ் தவான்



“இந்த உலகில் நாம் மாணிக்கங்களை அரிதாகத்தான் காணமுடியும். ராதாகிருஷ்ணன் அது போன்றதொரு மாணிக்கம். அவர் உலகின் தலைச்சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர். அவரைப் போன்ற காவல்துறை அதிகாரி 19/2 சம்பவத்தில் தவறாக முடிவெடுத்து, வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் என்பதை ஏற்பதற்கில்லை.”

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வாதம்.



ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ்


யார் இந்த ராதாகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ராதாகிருஷ்ணன் 1983ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டார்.

1998 கோவை தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு கோவை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார். 1999ல் கருணாநிதி, சட்டசபையில் “ராதாகிருஷ்ணன் போன்ற காவல்துறை அதிகாரிகள் இருப்பதால்தான், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது” என்று பேசினார்.

இதன் பிறகு, இந்த ராதாகிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்தது.
1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இவ்வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு 1 கவனித்து வந்தது.

2001ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதன் தலைவராக 2002ல் ராதாகிருஷ்ணன் நியமிக்கப் பட்டார்.

இந்த வழக்குகளில் ஒன்று ஜெயலலிதா ராஜ்யசபா எம்பியாக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு ஒன்று (Cr.No.14/AC/97/HQ). மற்றொரு வழக்கு, 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு. (Cr.No.13/AC/96/HQ).

இந்த இரு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பு, சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனுடையது.

இந்த மாணிக்கம் என்ன செய்தது தெரியுமா ? ஜெயலலிதா மீது இருந்த முதல் சொத்துக் குவிப்பு வழக்கை அவசர அவசரமாக முடிக்க உத்தரவிட பரிந்துரை செய்தார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார்.

இதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா ? ராதா கிருஷ்ணனின் மகன் சந்தீப் 2005ல் ப்ளஸ் டூ தேர்ச்சி அடைந்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதி, ப்ளஸ் டூ மதிப்பெண்களோடு சேர்த்து சந்தீப் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 300க்கு 188.31. 2005-2006 கல்வி ஆண்டில், பழங்குடியின மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் என்ன தெரியுமா ? 246.92.

ஆனால் விசித்திரமாக 188.31 மதிப்பெண் எடுத்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சந்தீப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தில் Electronics & Communication Engineering (ECE) பிரிவில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் ஒதுக்கப் பட்டது. இது எதற்கான கைமாறு என்று புரிகிறதா ? அடுத்து என்ன செய்தார் இந்த மாணிக்கம் ?


பெங்களுரில் நிலுவையில் இருக்கும் ஜெயலலிதா மீதான இரண்டாவது சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துக்கள், சென்னை Small Causes Court ஆல் attachment செய்யப் பட்டிருந்தது. 2005ல் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள், இந்த சொத்துக்களை attachment ஆணையிலிருந்து விடுவிக்க Small Causes Courtல் மனு செய்தனர். ராதாகிருஷ்ணன், சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் இந்த மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, Small Causes Courtல் நடைபெற்று வந்த வழக்குக்கு தடை பெற்றார். இது எதற்கான கைமாறு என்று புரிகிறதா ?இப்படி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்த ராதாகிருஷ்ணனுக்கு, திமுக அரசு சென்னை மாநகர ஆணையர் பதவி வழங்கி கவுரவித்துள்ளது. எப்படிப்பட்ட பச்சோந்திகள் இந்த அதிகாரிகள் என்பது தெரிகிறதா ?

இதே போல் நரேந்திர பால் சிங் என்று மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி. அவரும், லஞ்ச ஒழிப்புத் துறையில், ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை கவனித்து வந்தார்.

இவர் அதிமுக அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் வளர்மதிக்கு எதிரான வழக்குகளை மேல்நடவடிக்கை இன்றி, அவசர அவசரமாக முடிக்க பரிந்துரை செய்தார். இதற்கு கைமாறாக 300க்கு 229.44 மதிப்பெண்கள் பெற்ற இவரது மகள் குர்பானி சிங் என்பவருக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் Computer Science and Engineering என்ற பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் இடம் வழங்கப் பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவர் பெற்ற மதிப்பெண் அந்த ஆண்டின் பழங்குடியின வகுப்பினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 241.44ஐ விடக் குறைவு.

உங்களில் பலரது பிள்ளைகள் ப்ளஸ் டூ படித்தும், படித்துக் கொண்டும் இருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைப்பது எதற்காக ? எப்படியாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல கல்லூரியில் இடம் பெற வேண்டும், அரசுக் கல்லு£ரியில் மருத்துவம் அல்லது பொறியியல் இடம் பெற வேண்டும் என்று இரவு பகலாக படிப்பார்கள். ஆனால், இந்த அதிகாரிகள், இட ஒதுக்கீட்டின்படி, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு செல்ல வேண்டிய இடங்களை குறுக்கு வழியில் எப்படி பெறுகிறார்கள் பார்த்தீர்களா ?

இதுதான் இந்த மாணிக்கத்தின் யோக்கியதை. 18.02.2009 அன்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ராதாகிருஷ்ணன் “இந்த வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அவர்கள் கை, கால்களை உடைக்க வேண்டும்.” என்று கூறியதைக் கேட்டு சக அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். 20.02.2009 அன்று மறுநாள் ராதாகிருஷ்ணன் “வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்த வக்கீல்களுக்கு பாடம் புகட்டுவோம்” என்று கூறியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேராசிரியர்.பிரபா.கல்விமணி என்பவர் கடந்த நவம்பர் 2007ல் தலைமைச் செயலாளருக்கும், உள்துறைச் செயலாளருக்கும் இந்த இரு அதிகாரிகள் மீதும், அண்ணா பல்கலைக்கழகம் மீதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, புகார் மனு ஒன்றை அனுப்பினார்.

அந்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அரசை பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லி கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டது.

இப்படிப்பட்ட, ராதாகிருஷ்ணனுக்கு இந்த கருணாநிதி அரசு வக்காலத்து வாங்குகிறது. இவரைத்தான் ராஜீவ் தவான் அரிதிலும் அரிதான மாணிக்கம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.


ஒப்பாரி

5 comments:

  1. பச்சோந்தி வகை அழிந்துவிட்டதாக யாரோ கட்டுக்கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் தலைவா. ம்ம்ம்ம்

    http://thisaikaati.blogspot.com

    ReplyDelete
  2. You are wrong.

    Both officers got the seats under government quota. It is different from SC and ST or BC quota. So, you cant compare the marks.

    It is like management quota. The management of the private college can allot it to anyone they like. No one can question that. Thus, Udiayar Ramachandra Medical college sells their quota Rs.80 lakhs per seat. Mere pass marks enough. Will you find fault with it comparing the marks with the Entrance Exam quota?

    Please first get the facts right, then write.

    ReplyDelete
  3. Dear anonymous, I would have been happy, if you had left your name. I suspect whether you are Radhakrishnan himself. There is no doubt that people who had got less marks can be allotted a seat under Government quota. But, doing a favour to a politician and getting seat from the same politician is punishable under the Prevention of Corruption Act. There is no dispute about Ramachandra Medical College because, it is a private institution. Since Anna University is a government college, governed by rules, getting an allotment under Government quota will definitely make one come under the scanner.

    ReplyDelete
  4. erodelawyersena.blogspot.com


    good posting that reqires an axxplanation fromall concerned

    n.senapath

    ReplyDelete